Published : 20 Aug 2018 11:18 AM
Last Updated : 20 Aug 2018 11:18 AM

சாகச பிரியர்களுக்கு டாடா சோல்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எஸ்யுவி வாகன  உரிமையாளர்களுக்காக `சோல்’ என்கிற வாகன உரிமையாளர்கள் குழுவை நிர்வகித்து வருகிறது. இந்த குழு சார்பின் ஆண்டுதோறும் இமயமலை சாகச பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்கிறது.  இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த மாதம் 3-ம் தேதியிலிருந்து

12-ம் தேதி வரையில் இமயமலை சாகச பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சண்டீகரிலிருந்து தொடங்கிய பயணம் லடாக் சென்று முடிந்துள்ளது.

1300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை சாகச பிரியர்களுக்கான சொர்க்க புரியாக திகழ்கிறது. சபாரி, ஹெக்சா வாகன உரிமையாளர்கள் இந்த பயணத்தில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. இந்த 1300 கிலோமீட்டர் தூரம் பயணம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சாசகசங்களைக் கொண்டதாக இருக்கும்.

இந்த பயணத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களிலிருந்து 12 வாகனங்கள் தேர்வாகின. ஆகஸ்ட் 3-ம் தேதி 32 நபர்களுடன் சண்டிகரிலிருந்து இந்த பயணம் புறப்பட்டது.

லடாக் செல்வதற்கு முக்கிய சாலையான ரோஹ்டாங் சாலை, பாரலகா (Baralachha) பாதை வழியாக இந்த பயணம்  ஏற்பாடு செய்யப்பட்டது. பாரலகா சாலை கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் உள்ளது. நகிலா 16,500 அடி உயரமும், லஞ்ச்குலா கணவாய் 16,600 அடி உயரத்திலும் உள்ளது.

பத்து நாட்கள் பயணத்தில் 18,380 அடி உயரத்தில் உள்ள ஹார்டங் கணவாயை தொட்டு இந்த சாகச பயணம் நீளும்.

உலக அளவில் மிக அபாயகரமான சாலை மார்க்கமாகவும் இந்த நெடுஞ்சாலை பெயர்பெற்றது. இதன் காரணமாகத்தான் இந்த சாகச பயணத்துக்கு டாடா மோட்டார்ஸ் ஏற்பாடு செய்கிறது.  ஆன்-ரோடு, ஆப்-ரோடு என இரண்டு பயணத்துக்கும் டாடா எஸ்யுவி வாகனங்கள் எந்த அளவுக்கு ஈடு கொடுக்கின்றன என்பதை எஸ்வியு வாகன உரிமையாளர்கள் அனுபவ பூர்வமாக தெரிந்து கொள்ள இந்த பயணம் வாய்ப்பாக அமையும்.

இந்த பயணத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும்  எஸ்யுவி வாகன உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் டாடா `சோல்’ குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

இந்த பாதையும், பயணமும் சாகசம் நிறைந்தது என்பதைத் தாண்டி, இமயமலையின் அழகையும் ரசிக்கலாம். இதுவரை பார்த்திராத இடங்கள், பனி போர்த்திய இமயமலையின் பல்வேறு அம்சங்களை ரசிக்கும் விதமாகவும் இருந்தது என்கின்றனர் இதில் கலந்து கொண்டவர்கள். இமயமலையில் உச்சியில் உள்ள பனகாங் ஏரி அருகே இரவு தங்கும் அனுபத்தை எந்த பயணத்திலும் பெற முடியாது என்கின்றனர்.

இந்த பயணத்திட்டத்தில் ஸான்ஸ்கர் ஆற்றில் படகு சவாரி, சமையல் பயிற்சி குறிப்பாக உள்ளூர் சிறப்பு உணவுகள் மற்றும் அவற்றை சமைப்பதற்கான பயிற்சிகளும் இருந்துள்ளது. டாடா எஸ்யுவி வாகன உரிமையாளர்களுக்கான இந்த சாகச பயணம் போல, ஆண்டு முழுவதும் பல திட்டங்களை டாடா மோட்டார்ஸ் ஏற்பாடு செய்கிறது.  குறிப்பாக லடாக் சாகச பயணம் 2012-ம் ஆண்டிலிருந்து டாடா மோட்டார்ஸ் செய்து வருகிறது. இந்த குழுவில் 10,000 த்துக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர்.

சோல் குழுவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாகன உதிரிபாகங்களுக்கான சிறப்பு சலுகையும் அளிக்கப்படுகின்றன. வாரண்டி, இன்ஷூரன்ஸ் போன்றவற்றிலும் சலுகைகள் கிடைக்கும்.  டாடா சோல் உறுப்பினர்கள் தங்கள் வாகனத்துக்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x