Published : 06 Aug 2018 10:25 AM
Last Updated : 06 Aug 2018 10:25 AM

வெற்றி மொழி: ரிச்சர்ட் எம் நிக்சன்

1913-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை வாழ்ந்த ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்காவின் 37வது அதிபர் ஆவார். முன்னதாக அமெரிக்காவின் 36வது துணை அதிபராகப் பணியாற்றியுள்ளார். மேலும், வழக்கறிஞராகவும் அமெரிக்க கடற்படையிலும் பணிபுரிந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் வியட்நாமில் போரில் போர் நிறுத்தம் கொண்டுவந்தார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிபர் பதவியிலிருந்து விலகியவர் இவர் ஒருவரே. நிறைய வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதுடன் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்

# இழப்பு ஏற்பட்டால், அதில் நீங்கள் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது.

# சிறந்த எஃகு மிகவும் வெப்பமான நெருப்பின் வழியாகச் செல்லவேண்டும்.

# நீங்கள் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்திருந்தால் மட்டுமே, மிக உயர்ந்த மலை மீது இருப்பது எவ்வளவு அற்புதமானது என்பதை அறியமுடியும்.

# நீங்கள் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்திருந்தால் மட்டுமே, மிக உயர்ந்த மலை மீது இருப்பது எவ்வளவு அற்புதமானது என்பதை அறியமுடியும்.

# செயல்படாத மனிதனின் சிந்தனை பயனற்றது; சிந்திக்காத மனிதனின் செயல்பாடு ஆபத்தானது.

# தோற்கடிக்கப்படும்போது ஒருவரது செயல் முடிவுறுவதில்லை. அவர் அதிலிருந்து வெளியேறும்போதே முடிவுபெறுகிறது.

# நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எப்பொழுதும் உங்களுடைய சிறந்ததை செய்யுங்கள். ஒருபோதும் சோர்வடையாதீர்கள்.

# வாடிக்கையாளர் எதையாவது கேட்கும்போது ஒருபோதும் இல்லை என்று சொல்லாதீர்கள், அது நிலவாக இருந்தாலும்கூட.

# வாடிக்கையாளர் எதையாவது கேட்கும்போது ஒருபோதும் இல்லை என்று சொல்லாதீர்கள், அது நிலவாக இருந்தாலும்கூட.

# மற்றவர்கள் உங்களை வெறுக்கலாம். ஆனால் உங்களை வெறுப்பவர்களை நீங்கள் வெறுக்காதவரை அவர்கள் வெற்றிபெறப்போவதில்லை.

# உங்கள் கோபம் ஆழமாகவும் வலுவாகவும் இருந்தால், அந்த மனோபாவத்தை சிறப்பான முறையில் மாற்றிக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.

# தீர்வுகள் என்பவை பதில் ஆகாது.

# ஒன்றுக்குப் பிறகான மற்றொரு நெருக்கடியே வாழ்க்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x