Published : 25 Jun 2018 10:54 AM
Last Updated : 25 Jun 2018 10:54 AM

வெற்றி மொழி: ஓக் மேண்டினோ

1923-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஓக் மேண்டினோ அவர்கள் அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். வெற்றிக்கு வழிகாட்டும் பல்வேறு வகையான சுய முன்னேற்ற புத்தகங்களை படித்து, தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாக மாற்றிக்கொண்டார். இவரது புத்தகங்கள் 5 கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. மேலும், இருபத்தைந்து வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளன. பரவலாக வாசிக்கப்படும் உத்வேகம் மற்றும் சுய முன்னேற்ற எழுத்தாளராக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார்.

# அமைதி, திருப்தி மற்றும் மகிழ்ச்சியை வெளியுலகில் தேடி, நேரத்தையும் முயற்சியையும் வீணாக்காதீர்கள்.

# வெற்றி பெறுவதற்கான என்னுடைய உறுதிப்பாடு வலிமையானதாக இருந்தால், தோல்வி என்னை ஒருபோதும் முந்திச்செல்லாது.

# எப்போதும் உங்களுடைய சிறந்ததையே செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது எதை விதைக்கிறீர்களோ, அதையே பின்னர் அறுவடை செய்வீர்கள்.

# ஒவ்வொரு துன்பத்திலும் எப்போதும் வெற்றிக்கான விதையைத் தேடுங்கள்.

# தடைகள் என்பவை வெற்றிக்கு மிகவும் அவசியமான காரணிகள்.

# பல போராட்டங்கள் மற்றும் கணக்கிலடங்கா தோல்விகளுக்குப் பிறகே வெற்றி கிடைக்கின்றது.

# நீங்கள் செய்கின்ற அனைத்து விஷயங்களையும் அன்புடன் செய்யுங்கள்.

# முட்டாள்களின் காலண்டரில் மட்டுமே நாளை என்பது காணப்படுகிறது.

# வெற்றியைநோக்கி பயணிப்பதற்கான நெடுஞ்சாலையே தோல்வி என்பது.

# கண்டறியப்படும் ஒவ்வொரு தவறும், உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துகிறது.

# உண்மையான சந்தோஷம் உங்களுக்குள் இருப்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

# வைத்திருத்தல் அல்லது பெறுதலில் எவ்வித சந்தோஷமும் இல்லை, கொடுப்பதில் மட்டுமே உள்ளது என்பதை நினைவில் வையுங்கள்.

# நீங்கள் உங்கள் மனதில் அமைத்துக்கொண்டவையே உங்களுக்கான ஒரே வரம்புகள்.

# தன்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்த, தனது எண்ணங்களை அனுமதிப்பவர் பலவீனமானவர்; தன்னுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த, தனது செயல்களை அனுமதிப்பவர் வலுவானவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x