Published : 25 Jun 2018 10:53 AM
Last Updated : 25 Jun 2018 10:53 AM

அமெரிக்காவில் வோல்வோ கார் ஆலை

ஸ்

வீடனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ தனது முதலாவது ஆலையை அமெரிக்காவில் தெற்கு கரோலினா பகுதியில் சார்ல்ஸ்டன் எனுமிடத்தில் அமைத்துள்ளது. இதன் மூலம் வோல்வோ காருக்கு மிகவும் கிராக்கி உள்ள மூன்று பகுதிகளிலும் ஆலையை ஏற்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.

அமெரிக்காவில் இந்நிறுவனம் அமைத்துள்ள முதலாவது ஆலை இதுவாகும். இந்நிறுவனத்துக்கு ஐரோப்பாவில் இரண்டு கார் உற்பத்தி ஆலையும் ஒரு இன்ஜின் ஆலையும் உள்ளன. சீனாவில் இன்ஜின் ஆலை மற்றும் இந்தியா, மலேசியாவில் அசெம்பிளி ஆலைகள் உள்ளன.

சார்ல்ஸ்டன் ஆலையில் வோல்வோ எஸ்60 பிரீமியம் ரக நடுத்தர ரக ஸ்போர்ட்ஸ் செடான் கார்கள் தயாரிக்கப்படும். 2021-ம் ஆண்டிலிருந்து இந்த ஆலையில் வோல்வோ எக்ஸ்சி90 அடுத்த தலைமுறை எஸ்யுவியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் இங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்த ஆலையை வோல்வோ பயன்படுத்த உள்ளது.

இந்த ஆலையை அமைக்க வோல்வோ நிறுவனம் 110 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

புதிய ஆலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (ஆர் & டி), பொருள் கொள்முதல், தர நிர்ணயம் மற்றும் விற்பனை அலுவலகங்கள் அமையும். ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்களை உற்பத்தி செய் யும் திறன் கொண்டது. மொத்தம் 1,600 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இதில் கட்டிட பகுதி மட்டும் 23 லட்சம் சதுர அடியாகும். 2015-ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது ஆலை பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வோல்வோ சந்தையை மேலும் வலுப்படுத்த இந்த ஆலை உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x