Published : 30 Apr 2018 11:38 AM
Last Updated : 30 Apr 2018 11:38 AM

வெற்றி மொழி: கில்பர்ட் கே செஸ்டர்டன்

1874-ம் ஆண்டு முதல் 1936-ம் ஆண்டு வரை வாழ்ந்த கில்பர்ட் கே செஸ்டர்டன் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர், தத்துவஞானி, நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், பேச்சாளர், இறையியலாளர், கலை மற்றும் இலக்கிய விமர்சகர் போன்ற பன்முகத் திறனாளர். சுமார் என்பது புத்தகங்கள், நூற்றுக்கணக்கான கவிதைகள், இருநூறு சிறுகதைகள், நான்காயிரம் கட்டுரைகள் மற்றும் பல நாடகங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். இவரது படைப்புகள் அறிவாற்றலுடன் நகைச்சுவை உணர்வினையும் தொடர்ச்சியாக வெளிக்காட்டுபவையாக இருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இங்கிலாந்து இலக்கியத்தில் முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.

# மேகங்களில் உள்ள ஒரு கோட்டைக்கு கட்டிடக்கலை விதிமுறைகள் என்று எதுவுமில்லை.

# ஒரு ரயிலை பிடிப்பதற்கான உறுதியான ஒரே வழி, இதற்கு முன்னால் வேறொன்றை தவறவிட்டிருப்பதே.

# ஒரு பயணி தன் கண்களுக்கு என்ன தெரிகிறதோ அதைப் பார்க்கிறார், ஒரு சுற்றுலாப்பயணி எதைப்பார்க்க வந்தாரோ அதைப் பார்க்கிறார்.

# ஒருவர் பள்ளத்தாக்கிலிருந்து பெரிய விஷயங்களைக் காண்கிறார்; உச்சியிலிருந்து சிறிய விஷயங்களை மட்டுமே காண்கிறார்.

# எதையும் நேசிப்பதற்கான வழி, அது இழக்கப்படலாம் என்பதை உணர்ந்திருப்பதே.

# விரும்பாதவற்றையும் நேசிக்க வேண்டும் என்பதே அன்பு, அப்படியில்லையென்றால் அது நல்லொழுக்கம் அல்ல.

# ஒரு நல்ல நாவல் அதன் ஹீரோவைப் பற்றிய உண்மையை நமக்குச் சொல்கிறது; ஆனால் ஒரு மோசமான நாவல் அதன் ஆசிரியரைப் பற்றிய உண்மையை நமக்குச் சொல்கிறது.

# ஒரு விஷயம் செய்வதற்கு மதிப்புள்ளதாக இருந்தால், அது மோசமாக செய்யப்படுவதற்கும் மதிப்புள்ளதே.

# அவர்களால் தீர்வுகாண முடியவில்லை என்பதல்ல. அவர்களால் பிரச்சினையை பார்க்க முடியவில்லை என்பதே சரி.

# மக்கள் பொதுவாக சண்டையிடுகின்றனர், ஏனென்றால் அவர்களால் வாதிட முடிவதில்லை.

# கண்ணில் தொடங்கி இதயம் வரையிலும் உள்ள பாதை, அறிவின் வழியாக செல்லாது.

# ஒருவர் என்ன சொல்லவில்லை என்பதை அறியும்வரை, அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x