Published : 30 Apr 2018 11:38 AM
Last Updated : 30 Apr 2018 11:38 AM

புதிய கருவி கண்டுபிடிப்பு: போதையில் இருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது

ந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 16 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இவற்றில் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் குடி போதையில் வாகனம் ஓட்டுவதுதான் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உத்திராகண்ட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை குடிபோதையில் உள்ளவர்கள் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகாது. உத்திராகண்ட் உள்ளுறை பல்கலை மற்றும் ஆர்ஐ இன்ஸ்ட்ரூமென்ட் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்.பி. ஜோஷி, ஆகாஷ் பாண்ட, குல்தீப் படேல் உள்ளிட்ட நிபுணர் குழு இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது.

கிராபீன் பூச்சு பூசப்பட்ட எலெக்ட்ரோட் உணர் கருவிகளைக் கொண்டது இந்த கருவி. வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்முன்பு, டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்போர் ஒருவேளை மது அருந்தியிருந்தால், வாகனம் ஸ்டார்ட் ஆகாது. ஒருவேளை மது அருந்தாத நண்பரை ஊதச் செய்து, சிறிது மது அருந்தியிருப்பவர் காரை ஸ்டார்ட் செய்யலாம் என்றாலும் அதுவும் நடக்காது. இதில் உள்ள உணர் கருவி டிரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் சுவாசக் காற்றை உணர்ந்து உடனடியாக வாகன செயல்பாட்டை நிறுத்திவிடும். .

செல்போனில் பேசினால் இத்தகைய வாகனம் இருக்குமிடத்தை உடனடியாக போலீஸுக்கு ஜிபிஆர்எஸ்-ஜிஎஸ்எம் மூலம் தகவல் அனுப்பிவிடும். இந்தக் கருவி சர்வதேச ஆட்டோமொபைல் சோதனை மையத்தில் மிகவும் விரிவாக சோதித்துபார்க்கப்பட்டது. அனைத்து சோதனைகளிலும் இந்தக்கருவி திருப்திகரமாக செயல்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x