Published : 30 Apr 2018 11:38 AM
Last Updated : 30 Apr 2018 11:38 AM

பேட்டரி வாகன சோதனையில் எம்ஜி மோட்டார் தீவிரம்

 

மோ

ரிஸ் காரேஜஸ் (எம்ஜி) மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் பேட்டரி வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. எம்ஜி மோட்டார் கார்ப்பரேஷன் பிரிட்டன் நிறுவனமாகும். இதை சீனாவைச் சேர்ந்த எஸ்ஏஐசி மோட்டார் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தனது ஆலையை அமைக்க எஸ்ஏஐசி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக ஜிஎம் மோட்டார் நிறுவனத்தின் குஜராத் ஆலையை இந்நிறுவனம் வாங்கியது. இதில் எம்ஜி மோட்டார் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கார்களை தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக பேட்டரியில் இயங்கும் இரண்டு கார்களை இந்நிறுவனம் சோதனைக் களத்தில் இறக்கியுள்ளது. நிறுவனத் தயாரிப்பை கண்டுபிடிக்க முடியாத வகையில் முழுவதுமாக மறைக்கப்பட்டு சாலைகளில் சோதனை நடத்தி வருகிறது இந்நிறுவனம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்திய சாலைகளில் எவ்வளவு தூரம் ஓடுகிறது, வாகனம் எதிர்கொள்ளும் பிரச்சினை, இழுதிறன் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன.

ஒரு கார் எஸ்யுவி மாடலாகவும் மற்றொன்று சிறிய ரகக் காராகவும் இந்நிறுவனம் தயாரித்து சோதித்து வருகிறது. ரோவே என்பது இந்நிறுவனம் (எஸ்ஏஐசி) 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்த சொகுசு மாடல் எஸ்யுவி ரகமாகும். மற்றொன்று எஸ்ஏஐசி இ 100 எனப்படும் சிறிய ரகக் காராகும். எஸ்யுவி மாடல் கார்கள் 425 கி.மீ. தூரம் வரையிலும், மினி கார் 155 கி.மீ. தூரம் வரையிலும் சோதிக்கப்பட்டுள்ளன.

வட மாநிலங்கள் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் இந்த வாகனங்களை சோதித்து பார்க்கவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.

எஸ்ஏஐசி-யின் 100 இ மாடல் காரானது நகர்ப்புறத்துக்கு ஏற்ற சிறிய ரக காராகும். சீன நகர்ப்புறத்தில் இது மிகவும் பிரபலமாகும். இது ஒற்றை மோட்டாரைக் கொண்டது. இது 110 நியூட்டன் மீட்டர் சக்தியை வெளிப்படுத்தக்கூடியது. இதன் டார்க் அளவு 29 கிலோவாட்டாகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ ஆகும். இதை 7.30 மணியில் முழுவதுமாக சார்ஜ் செய்து விட முடியும்.

எஸ்யுவி மாடலான ரோவோ இஆர்எக்ஸ் 5 மாடல் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 135 கி.மீ. ஆகும். இதில் உள்ள பேட்டரியில் 80 சதவீத அளவை 40 நிமிஷத்தில் சார்ஜ் செய்துவிட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x