Published : 09 Apr 2018 11:18 AM
Last Updated : 09 Apr 2018 11:18 AM

வெற்றி மொழி: எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட்

1896-ம் ஆண்டு பிறந்த ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் ஒரு அமெரிக்க எழுத்தாளர். சிறுவனாக இருந்தபோதே இலக்கியத்தில் அசாதாரண ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இவரது முதல் வெளியீடு பதிமூன்று வயதிலேயே பள்ளியின் செய்தித்தாள் மூலமாக வெளியானது. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதை தொகுப்புகள், நாடகம் மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். மேலும், இவரது படைப்புகளை தழுவி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

தன் வாழ்நாளில் ஓரளவிற்கே வெற்றியடைந்திருந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக இப்போது பரவலாகக் கருதப்படுகிறார். மாரடைப்பின் காரணமாக 1940-ம் ஆண்டு தனது நாற்பத்து நான்காவது வயதில் மறைந்தார். முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள், பின் அந்த மது இன்னொரு மதுவை அருந்துகிறது, அதன்பின் மது உங்களையே அருந்தத் தொடங்குகிறது.

# நீடித்த செயல்பாட்டிற்கான திறனை மட்டுமல்லாமல், அச்செயலை தொடங்குவதற்கான திறனையும் வெளிக்காட்டுவதே உற்சாகம்.

# ஒரு செயலுக்கான ஒற்றை தோல்வியை இறுதி தோல்வியுடன் சேர்த்து ஒருபோதும் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

# குடும்ப சண்டைகள் என்பவை கசப்பான விஷயங்கள். அவைகள் எந்த விதிமுறைகளின்படியும் செல்லாது.

# நுண்ணறிவு என்பது உங்கள் மனதில் உள்ளதை செயல்படுத்துவதற்கான திறமையே.

# உங்கள் செயல்பாடே உங்களது குணம்.

# மறந்துவிட்டதே மன்னிப்பு.

# வீழ்ச்சியில் சுறுசுறுப்பாக இருக்கும்போது வாழ்க்கையானது மீண்டும் தொடங்குகிறது.

# இந்த உலகில் அனைத்து வகையான அன்பும் இருக்கின்றன, ஆனால் அதே அன்பை இருமுறை பெற்றதில்லை.

# எனது உணர்வுகளுக்கு, எனது விருப்பங்களுக்கு, எனது வெறுப்பிற்கு, எனது பெரும்பாலான ஆசைகளுக்கு நான் ஒரு அடிமை.

# உங்களை நீங்களே ஒருபோதும் பயனற்றவராக நினைக்க வேண்டாம்.

# சில நேரங்களில் ஒரு இன்பத்தை விடவும் வலியை இழப்பது கடினமாக உள்ளது.

# பலரும் தங்களது தவறுகளுக்கு சூட்டும் பெயரே அனுபவம் என்பது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x