Published : 30 Jan 2017 10:41 AM
Last Updated : 30 Jan 2017 10:41 AM

வெற்றி மொழி: லியோ பஸ்காக்லியா

1924ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த லியோ பஸ்காக்லியா அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். மேலும், இவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சிறப்பு கல்வி துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். சிறப்பான பாணியில் செய்திகளை வழங்கும் முறையின் மூலம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டவர். விற்பனையில் சிறந்து விளங்கிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஒரே நேரத்தில் இவரது ஐந்து புத்தகங்கள் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

# அதிக விஷயங்களில் ஆர்வமுடன் அன்பு செலுத்துபவர்களுக்கு வாழ்க்கை ஒரு சொர்க்கம்.

# ஒரு ஒற்றை ரோஜா என் தோட்டமாக முடியும். ஒரே ஒரு நண்பன் எனது உலகமாக முடியும்.

# மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதற்கு, நீங்கள் முதலில் உங்களை நேசிக்க வேண்டும்.

# எனக்கு ஞானம் இல்லையென்றால், அறியாமையை மட்டுமே என்னால் உங்களுக்கு கற்றுத்தர முடியும்.

# பலவீனம் மட்டுமே கொடுமையானது. நற்பண்பினை வலிமையிலிருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியும்.

# உங்கள் திறமை உங்களுக்கான கடவுளின் பரிசு. அதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது கடவுளுக்கான உங்களின் பரிசு.

# வாழ்வின் நோக்கம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே, உங்களால் அவர்களுக்கு உதவமுடியவில்லை என்றால், குறைந்தபட்சம் அவர்களை புண்படுத்த வேண்டாமே.

# நாம் கற்பதை நிறுத்தும் நிமிடம், நமது மரணத்திற்கான செயல்பாட்டினையும், மரணத்தையும் தொடங்குகிறோம்.

# நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தேவைப்படுபவர்களாக இருக்கிறோம்.

# அன்பு எப்போதும் உருவாக்குகிறது, அது ஒருபோதும் அழிப்பதில்லை.

# அன்பே வாழ்க்கை. நீங்கள் அன்பை தவறவிட்டால், வாழ்க்கையை தவறவிடுகிறீர்கள்.

# கல்வியானது மதிப்பிற்குரியதாக இருக்கும் வீடுகளிலிருந்தே சிறந்த மாணவர்கள் வெளிவருகிறார்கள்.

# இறப்பு சவாலானது. அது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நமக்கு சொல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x