Published : 30 Nov 2015 11:34 AM
Last Updated : 30 Nov 2015 11:34 AM

ஆட்டோமொபைல் துறையில் வாய்ப்பைத் தவற விடும் சிறு, குறு நிறுவனங்கள்

இந்தியாவில் மிக அதிக அளவில் ஆட்டோமொபைல் அதாவது கார், இரு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் இவற்றுக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவற்றை உரிய வகையில் குறு,சிறு தொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்ச னமான உண்மை.

கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவன மையம் (ஐஎஸ்இடி) நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைப்பின் தலைவராக பிஎம் மாத்யூ உள்ளார்.

ஆட்டோமொபைல் உதிரி பாகங் களை கொள்முதல் செய்யும் மைய மாக இந்தியா திகழ்கிறது. மேலும் பிற நாடுகளை விட குறைந்த விலையில் உதிரி பாகங்களை இந் நிறுவனங்களால் தயாரித்து அளிக்க முடியும். மேலும் ஆட்டோமொபைல் துறைக்கு மிக முக்கிய தேவையான உருக்கு இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கும் சாதக அம்சத்தையும் இந்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த ஆண்டு ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஏற்றுமதி 940 கோடி டாலராக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக உள்ளதுதான் வேதனையளிக்கும் விஷயம். டார்கெட் 2020 என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி இத்துறையின் தேவையான 40 ஆயிரம் கோடி டாலர் இலக்கை எட்டுவது நோக்கமாகும். இந்த இலக்கை எட்ட வேண்டும் எனில் அதற்கு துறைகளிடையிலான ஒத்து ழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் ஆட்டோமொபைல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில் இத்துறையில் பொதிந்துள்ள வாய்ப்புகளை முற்றிலுமாக வெளிக் கொண்டு வர முடியும்.

இதேபோல மின்னணுத் துறையில் பொதிந்துள்ள வாய்ப்புகள் ஏராளம். ஆனால் மின்னணு துறையில் இந்தியா இன்னமும் வலுவான கட்டமைப்பை உருவாக்கவில்லை. இதனால் மின்னணு துறையில் உள்ள வாய்ப்புகளை சாதகமாக்கிக் கொள்வது இப்போதைக்கு சற்று கடினமான விஷயம்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் மின்னணு இறக்குமதியை பெருமளவு குறைப்பதுதான் அரசின் நோக்கம். வெளிநாடுகளைச் சேர்ந்த மின்னணு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை அமைத்து அவை இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும்போதுதான் நமது இறக்குமதி குறையும் என்கிறது ஆய்வறிக்கை.

புதிய சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் பொதிந்துள்ள வாய்ப்புகளை நமக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும்.

வாய்ப்புகள் நம்மைச் சுற்றியுள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அந்தந்த துறைகளின் பொறுப்பு அல்லவா.?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x