Last Updated : 21 Jun, 2019 01:09 PM

 

Published : 21 Jun 2019 01:09 PM
Last Updated : 21 Jun 2019 01:09 PM

இந்தியாவில் முறைகேடாக வர்த்தக உரிமை புகார்: வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,950 கோடி அபராதம்

இந்தியா, பிரேசில், சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, முறைகேடாக வர்த்தக உரிமைகளை பெற்றதாக எழுந்த புகாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டுக்கு ரூ.1963 கோடி(28.2 லட்சம் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக பிரேசிலில் கட்டிட அனுமதிகளுக்காக மந்திரம், தந்திரம் செய்து அனுமதி பெற்றுத்தருகிறோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கும் போலி மந்திரவாதக் கும்பல் ஒன்றிற்கு 5 லட்சம் டாலர்கள் வரை வால்மார்ட் செலவு செய்துள்ளதும் இதில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்கச் சட்டத்திட்டங்களின் படி முறையற்ற விதத்தில் அயல்நாட்டு வர்த்தக உரிமைகளுக்காக இடைத்தரகர்களை அணுகுவதோ, அவர்கள் மூலம் லஞ்சம் லாவண்யம் கொடுத்து காரியம் சாதிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த அபராதத்தை அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செக்யூரிட்டி அன்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) விதித்துள்ளது. இந்த 28.20 லட்சம் டாலர் அபராதத்தை செலுத்த வால்மார்ட் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது

இந்தியா, சீனா, மெக்சிகோ, மற்றும் பிரேசில் நாடுகளில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சில் ஈடுபடாமல் மூன்றாம் நபர் இடைத்தரகர்கள் மூலம் பேச்சு நடத்தியும், அந்தந்த நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியும் வர்த்தக உரிமைகளை வால்மார்ட் நிறுவனம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து. இது குறித்து அமெரிக்க எஸ்இசி விசாரணை நடத்தி வந்தது.

அந்த விசாரணையில், எப்சிபிஏ எனச் சொல்லப்படும் அன்னியநாடு ஊழல்தடுப்புச் சட்டத்தின் விதிமுறைகளையும் வால்மார்ட் நிறுவனம் மதிக்காமல், அதை மீறி செயல்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக எப்சிபிஏ விதிமுறைகளை பின்பற்றாமல் தொழில்நடத்தியதும், வளர்ச்சி அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து எஸ்இசி அமலாக்கப்பிரிவு தலைவர் சார்லஸ் ஜெயின் வால்மார்ட் நிறுனத்துக்கு 282மில்லியன் டாலர் அபராதம்(28.20 லட்சம் டாலர்) விதித்து எஸ்இசி உத்தரவிட்டார்.

இந்தியா, பிரேசில், சீனா, மற்றும் மெக்சிகோ நாடுகளில் வர்த்தக உரிமைகளைப் பெறுவதற்காக இடைதரகர்கள் மூலம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வர்த்தக உரிமைகளைப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், எப்சிபிஏ விதிமுறைகளுக்கு உட்பட்டு இதுகுறித்து போதுமான விசாரணை நடத்த வால்மார்ட் நிறுவனம் தவறவிட்டது.

 இந்த அபராதத்தில் 14.40 லட்சம் டாலர் சிஎஸ்இ குற்றச்சாட்டுக்கான அபராதமாகவும், 13.80 லட்சம் டாலர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு அபராதமாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.  இந்த அபாரதத் தொகையை ஏற்றுக்கொண்டு செலுத்த வால்மார்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

வால்மார்ட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " நங்கள் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க விரும்புகிறோம். எஸ்சிஇ விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்த போதுமான அளவு நிறுவனத்திடம் பணம் இருக்கிறது. நிதிநிலைமையை பாதிக்காது.

வால்மார்ட் நிறுவனம் நேர்மையான முறையில் வர்த்தகம் செய்ய நினைக்கிறது, நியாயமாக நடக்க முனைகிறது. சர்வதேச ஊழல் தடுப்புச்சட்டத்துக்கு உட்பட்டு சர்வதேச அளவில் செயல்படும் எங்கள் நிறுவனங்கள் கட்டுப்பட்டு நடக்கும். சர்வதேச அளவில் ஊழல் தடுப்பு விதிமுறைகளும், அமைப்பும எங்களிடம் இருக்கின்றன.மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக செயல்பட விரும்புகிறோம் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x