Published : 02 Jun 2019 08:49 AM
Last Updated : 02 Jun 2019 08:49 AM

மின் உற்பத்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு

மின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் மூன்று முடங்கு உயர்த்தப்பட்டது மின் உற்பத்தி நிறுவனங்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே மின் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் நஷ்டத்திலிருந்து காப்பாற்றும் காப்பீடுகளின் செலவும் அதிகரித்தால் எப்படி என கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய ரீ-இன்ஷூரன்ஸ் நிறுவனமான ஜென் ரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் கடந்த பிப்ரவரியில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் எந்தெந்த துறை களிலெல்லாம் அதிக அளவில் கிளெய்ம் செய்யப்படுகிறதோ அந்தத் துறைகளுக்கு அதிகபட்ச பிரீமியத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதையடுத்து ரப்பர், பிளாஸ்டிக், டெக்ஸ்டைல், கெமிக்கல், உருக்கு ஆலைகள் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளுக்கு அதிக பிரீமியம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கான காப்பீடு கட் டணத்தை 200 சதவீதம் உயர்த்தி யுள்ளது தெரியவந்தது. காப்பீடுக் கான பிரீமியத்தை மூன்று மடங்கு அளவுக்கு உயர்த்தியதை எதிர்த்து மின் உற்பத்தி நிறுவனங்கள் கூட் டமைப்பு மின் துறை அமைச் சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளது.

அக்கடிதத்தில், ‘ஆயிரம் மெகா வாட் அளவுக்கு அதிகமாக திறன் படைத்த மின் உற்பத்தி நிலையங் களுக்கான காப்பீடு திட்டத்துக் கான பிரீமியத்தை 200 சதவீதம் உயர்த்தியுள்ளது. 2018-19-ல் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காப் பீடுக்கு பிரீமியம் ரூ.2.60 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.7.77 கோடியாக உயர்த்தப் பட்டிருக்கிறது.

இதில் தீ விபத்தினால் ஏற் படும் இழப்பு, இயந்திர பழுதி னால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட இயற்கையாக நடக்கும் இழப்பு களுக்குக் கூட அதிகபட்ச பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற இழப்புகள் மிக அரி தாகவே நடக்கின்றன. இவற்றுக் கான பிரீமியத்தை ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை 30-40 சதவீதம் என்ற அளவில் உயர்த்தினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இப்படி ஒரே அடியாக 200% உயர்த் துவது ஏற்கெனவே நிதி நெருக்கடி யில் இருக்கும் மின் துறைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத் தும்” எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கிளெய்ம் தொகையில் செய்யப்படும் கழிவு களிலும் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொருள் சேதத்துக்கான கழிவு 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.50 லட்சத்திலிருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் தொழில் முடக்கத்துக்கான கழிவு ரூ.42 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பிரீமியம் அதிகரிப்பு ஒன் றிரண்டு மின் உற்பத்தி நிலையங் களை மட்டுமே நம்பியுள்ள நிறு வனங்களுக்கு பெரிய பாதிப்பு களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x