பாஜகவுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: கருத்து கணிப்பால் பங்குச் சந்தையில் ஏற்றம்

கோப்புப் படம்

Published : 13 Mar 2019 11:18 IST
Updated : 13 Mar 2019 11:18 IST

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று கருத்து கணிப்புகள் வெளியானதால் நேற்று பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.

ஸ்திரமான ஆட்சி அமையும் என்ற காரணத்தால் அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் தங்க ளது முதலீடுகளை தொடர்ந்து மேற்கொண்டன.

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தை 481 புள்ளிகள் ஏற்றம் பெற்று 37,535 என்ற நிலையை எட்டியது. தேசிய பங்குச் சந்தையில் 133 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 11,301 புள்ளியைத் தொட்டது.

பார்தி ஏர்டெல் மிக அதிக பட்சமாக 4.61 சதவீதம் உயர்ந் தது. இது தவிர ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எல் அண்ட் டி, சன் பார்மா, ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் மற் றும் மஹிந்திரா அண்ட் மஹிந் திராஆகிய நிறுவன பங்குகள் 3.6 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

பங்குகள் ஏற்றம் பெற்ற போதிலும் பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, என்டிபிசி, கோல் இந்தியா, யெஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எஸ்பி, ஹீரோ மோட்டோகார்ப், டிசிஎஸ் ஆகிய நிறுவன பங்குகள் 1.13 சதவீதம் வரை சரிந்தன.

ரியல் எஸ்டேட் துறை 2.6 சதவீத அளவுக்கு உயர்ந்தது. டெலிகாம், வங்கித் துறை, சுகாதாரம், நிதி ஆகிய துறைகளின் குறியீட்டெண் ணும் கணிசமாக உயர்ந்தது.

அந்நிய முதலீட்டாளர்கள் திங்களன்று ரூ.3,810 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி யதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor