Published : 12 Mar 2019 11:25 AM
Last Updated : 12 Mar 2019 11:25 AM

மல்லையா வாங்கிய கடனை மீட்க ரூ.1,029 கோடி மதிப்பிலான யுபிஎல் பங்குகள் பறிமுதல்

விஜய் மல்லையா வாங்கிய கடனை மீட்க யுனைட்டெட் பிரூவரிஸ் லிமிட் டெட் நிறுவனத்தில் மல்லையா வுக்குச் சொந்தமான யுனைட்டெட் பிரூவரிஸ் ஹோல்டிங்ஸ் லிமிட் டெட் நிறுவனம் வைத்திருந்த ரூ. 1,029 கோடி மதிப்பிலான பங்கு களை கடன் மீட்பு தீர்ப்பாயம் பறிமுதல் செய்துள்ளது.

விஜய் மல்லையா இந்திய வங்கி களில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந் துள்ள நிலையில், அவர் வாங்கிய கடனை மீட்க அவரது சொத்துக் களை ஏலம் விடும் நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது, யுனைட்டெட் பிரூ வரிஸ் நிறுவனத்தில் அவர் வைத்திருந்த பங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மல்லையாவுக்குச் சொந்தமான யுனைட்டெட் பிரூவரிஸ் ஹோல் டிங்ஸ் லிமிட்டெட் நிறுவனம் யுனைட்டெட் பிரூவரிஸ் லிமிட் டெட் நிறுவனத்தில் 2.80 சதவீத பங்குகளை தன் வசம் வைத் துள்ளது. மொத்தம் 74,04,932 பங்குகள். ஒரு பங்கின் விலை ரூ.1,389.97 வீதம், இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,029 கோடி ஆகும். இதைப் பணமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

வங்கிகளும், கடன் கொடுத்தவர் களும் யுனைட்டெட் பிரூவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை மூடிவிட அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மார்ச் 2016-ன் போது இந்தியாவை விட்டு தப் பிய மல்லையா, இப்போது தேடப் படும் குற்றவாளியாக இருக் கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x