Published : 22 Feb 2019 12:50 PM
Last Updated : 22 Feb 2019 12:50 PM

நட்பு நாடு அந்தஸ்தை விலக்கியதால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு: எல்லையில் நிற்கும் சரக்கு வாகனங்கள்

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர்  பாகிஸ்தானை  முக்கிய நட்பு நாடு பட்டியலிலிருந்து இந்தியா விலகிய பிறகு வர்த்தகக ஒப்பந்தங்களும் ரத்தானதால் அட்டாரி எல்லையில் ஏராளமான சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு முக்கிய நாடு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.  முக்கிய நட்பு நாடு தகுதியை மற்றொரு நாட்டிற்கு வழங்கும் ஒரு நாடு, வரி இன்ன பிற சலுகைகள் வழங்க வேண்டும். மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் விதிவிலக்கு ஆகியவற்றை வழங்க வேண்டும். இது கட்டண மற்றும் வர்த்தக மீதான பொது ஒப்பந்தத்தின் (காட்) முதல் கட்டமாகும்.

இதுகுறித்து ஏஎன்ஐயிடம் வர்த்தகர்கள் பேசியதாவது;

‘‘இந்திய இறக்குமதியாளர்களும் உற்பத்தியாளர்களும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளனர். மேலும் முன் பணமாக வழங்கப்பட்ட தொகையையும் திரும்பவேண்டுமென கோரி வருகின்றனர்.

பிப்ரவரி 14க்குப் பிறகு, பாகிஸ்தானுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டது. தற்போது, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியம் அல்லாத பொருட்கள் மீதான 200 சதவீதம் ஒழுங்குமுறை வரியை அரசு சுமத்திள்ளதால் 200-250 லாரிகள் சரக்குகள் ஏதுமினறி எல்லைப் பகுதியின் அருகிலேயே நிறுத்தப்பட்டுள்ளன’’ என தெரிவித்தனர்.

சரண் சிங் என்ற வர்த்தக வியபாரி தெரிவிக்கையில், ‘‘இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிகஅளவிலான ஒழுங்குமுறை வரி அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் வணிகர்கள் லாரிகளின் மாதாந்திர தவணைகளை செலுத்துவதற்கு கடினமாக உள்ளது.

மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையால் எல்லைப் பகுதிகளுக்கு அருகே உணவு கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன, "என்றார்.

காஷ்மீர் எல்லைச் சாலைகள்

இப்பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம், மற்றொரு வர்த்தகர் ராஜ்தீப் உபேல் கூறியதாவது:

''பாகிஸ்தானுடனான இந்த வர்த்தக நடவடிக்கைகளால் நிறுத்தப்படுவது பஞ்சாப் மாநில ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து பெறப்பட்ட ஒப்பந்தங்களும்தான். அரசு முடிவுக்கு அனைத்து வர்த்தக அமைப்புகளும் ஒத்துழைக்கின்றன. 

அதேநேரம் காஷ்மீரில் சாலை போக்குவரத்திலான வணிக வழித்தடங்கள் இன்னும் திறந்திருக்கின்றன. தடை செய்வதால் இங்கு எந்த விளைவும் இல்லை'' என்று கூறி வியப்பேற்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x