Published : 22 Feb 2019 10:50 AM
Last Updated : 22 Feb 2019 10:50 AM

100 ரஃபேல் விமானங்களுக்கு ஆர்டர் தந்தால் இந்தியாவில் ஆலை: டஸால்ட் ஏவியேஷன் சிஇஓ தகவல்

இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்க வேண்டுமானால் 100 ரஃபேல் போர் விமானங்களுக்கு ஆர்டர் அளித்தால் சாத்தியம் என்று இத்தகைய விமானங்களைத் தயாரிக்கும் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்கவலை வெளியிட்டார்.

இப்போதைக்கு 36 விமானங் களுக்கு இந்தியா ஆர்டர் அளித்துள் ளது. 100 விமானங்களுக்கான ஆர்டராக இருப்பின் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

நாக்பூரில் உள்ள ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம், ஃபால்கன் 2000 ரக விமானத்துக் கான காக்பிட் மற்றும் எரிபொருள் டேங்க் உள்ளிட்டவற்றை தயா ரித்து அளிக்கிறது. ரஃபேல் விமா னத்துக்கான உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றார்.

நாக்பூரில் விமானங்கள் உற்பத்தி

டஸால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஃபால்கன் 2000 ரக விமானங் களை நாக்பூரில் உள்ள ஆலை யில் தயாரிக்க உள்ளது. இரு நிறு வனங்களும் இணைந்து கூட்டாக உருவாக்கிய நிறுவனம்தான் டஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ் பேஸ் லிமிடெட் ஆகும். இப்போது உதிரி பாகங்களாக தயாரிக்கப்படும் ஃபால்கன் 2000 ரக விமானங்கள் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு 2022-ம் ஆண்டிலிருந்து முழுமையாக தயாராகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

டிஆர்ஏஎல் நிறுவனம் தற்போ தைக்கு ஃபால்கன் விமானங்களை தயாரிக்கும். ரஃபேல் போர் விமா னங்கள் 36-க்கு மட்டுமே ஆர்டர் தரப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது சரியாக இருக் காது என்று அவர் குறிப்பிட்டார்.

நாக்பூரில் உள்ள டஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறு வனத்தில் தயாரிக்கப்பட்ட முதலா வது ஃபால்கன் 2000 விமானத் துக்கான காக்பிட் பகுதி இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

போர் விமான உற்பத்தியில் சிறிதும் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் குழுமத்தை கூட்டாளியாக தேர்வு செய்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்களிடம் தொழில் நுட்ப அறிவு உள்ளது. அதை அவர்களுக்கு அளிப்பதில் எவ்வித சிரமமும் இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

ரஃபேல் ஒப்பந்தத்தால் எழுந் துள்ள சர்ச்சைகள் நிறுவனம் மேலும் அதிக ஆர்டர் பெறுவ தற்கு முட்டுக்கட்டையாக அமைந் துள்ளதா என்று கேட்டதற்கு, அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாவது ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு அளிக்கப்படும் என்றார். எஞ்சியுள்ள 35 விமானங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x