Published : 21 Feb 2019 06:13 PM
Last Updated : 21 Feb 2019 06:13 PM

இபிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது. அந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளரது பிஎப் கணக்கில் சேர்க்கப்படும். இதுதான் இபிஎப் கணக்கின் நடைமுறை.

இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து வாரியத்தின் அறங்காவலர் குழு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில் கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில் இபிஎப் கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை தற்போதுள்ள 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. நிதியமைச்சகம் இதற்கு அனுமதி அளி்த்தவுடன் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

கடந்த 3 ஆண்டுகளாகவே இபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டே வந்தது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வட்டி விகிதம் தற்போது சற்று உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x