Published : 23 Jan 2019 10:49 AM
Last Updated : 23 Jan 2019 10:49 AM

முதலீடுகளை ஈர்ப்பதில்  இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேற்றம்: பிடபிள்யூசி கருத்துக் கணிப்பு தகவல்

முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் தொடங் கும் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் (டபிள்யூஇஎப்) மாநாட்டை முன்னிட்டு பிடபிள்யூசி நிறுவனம் வெளியிட்ட அறிக் கையில் இந்தத் தகவல் வெளி யாகியுள்ளது.

மாநாட்டின் தொடக்க நாளான நேற்று வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் சீனா மீதான சர்வதேச நாடுகளின் அபிப்ராயம் சரிந்து வந்த போதிலும் அமெரிக் காவுக்கு அடுத்தபடியாக அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடாக சீனா திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதலீடுகளை ஈர்க் கும் நாடுகளுக்கான மதிப்பீட்டு பட்டியலில் இரு நாடுகளுமே சரிவைச் சந்தித்துள்ளதாக பிடபிள்யூசி தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் 91 நாடுகளைச் சேர்ந்த 1,300 சிஇஓக்க ளிடம் கருத்துகேட்கப்பட்டு அதன டிப்படையில் இது தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் இந்தியா மீதான அபிப்ராயம் 9 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 46 சதவீதத்திலிருந்த அமெரிக்காவின் பிரபலம் தற்போது 27 சதவீதமாக உள்ளது. முன்பு 33 சதவீதம் எடுத்திருந்த சீனாவின் இடம் தற்போது 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜெர்மனி 20 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக சரிந்துள்ளது.

தங்களது நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை என்று 15 சதவீத சிஇஓக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப் பினும் பெரும்பாலான சிஇஓக்க ளின் தேர்வு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளாக இருந்தன. பெரும்பாலான சிஇஓக்கள் இந்தியா, ஜெர்மனியில் முதலீடு செய்வதை விரும்புவதாகத் தெரிவித்தனர்.

இந்தியாவில் முதலீடு செய்வதை பெரும்பாலான சிஇஓக் கள் விரும்புகின்றனர். அந்த வகையில் பிரிட்டனைக் காட்டிலும் முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜப்பான், இங்கி லாந்து ஆகிய நாடுகள் இந்தி யாவுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன

இங்கிலாந்துக்கு பிரெக்ஸிட் பிரச்சினை காரணமாக பின்ன டைவு ஏற்பட்டதாக பிடபிள்யூசி ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான சிஇஓக்களின் நம்பகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா திகழ் வதாகவும் பிடபிள்யூசி தெரி விக்கிறது.

அடுத்த 12 மாதங்களில் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று 30 சதவீத தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதேபோன்று கருத்து தெரிவித்தவர்களோடு ஒப்பிடுகை யில் இது 6 மடங்கு அதிகமாகும். அதேசமயம் பொருளாதாரம் மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்று 29 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு இதே கருத்தை 57 சதவீதம் பேர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் நிகழும் வர்த்தகப் போர், வர்த்தக பாது காப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலான சிஇஓக்களின் கருத்து முந்தைய ஆண்டை விட சற்று குறைவாகவே உள்ள தாக ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன. அதேபோல நிறுவனங் களின் வருமானம் குறையும் என்று 35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை தொழில்நுட்பம் மூலம் தங்களது வர்த்தகம் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டும் என்று 85 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இணையதளம் மூலம் ஏற்பட்ட புரட்சியைக் காட்டிலும் ஏஐ நுட்பம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மூன்றில் இரு மடங்கு பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x