Published : 28 Dec 2018 08:15 AM
Last Updated : 28 Dec 2018 08:15 AM

ஆயத்த ஆடை துறையில் 20 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி

ஆயத்த ஆடை துறையில் நிர்வா கம் மற்றும் கண்காணிப்பில் ஈடுபடும் 20 லட்சம் பேருக்கு 2022-ம் ஆண்டுக்குள் திறன் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக செயலர் கே.பி.கிருஷ்ணன் தெரி வித்தார்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத் துடன், தேசிய திறன் மேம்பாட்டுக் குழு (NSDC) இணைந்து, ஆயத்த ஆடை வீட்டு உபயோகப் பொருட் களான திறன் துறை குழு (Apparel Made-Ups & Home Furnishing Sector Skill Council - AMHSSC) எனும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலமாக, ஆயத்த ஆடை துறையின் திறன் மேம்பாட்டுக்கான களஞ்சியத்தை உருவாக்குதல், துறை சார்ந்த தொழிலாளர் சந்தை தகவல் அமைப்பை நிறுவுதல், தொழில் பயிற்சி தரத்துக்கான கட்டமைப்பை மேம்படுத்துதலுடன், மூன்றாம் தரப்பு மதிப்பீட்டுச் சான்றி தழ் வழங்குதல் முதலானவை மேற் கொள்ளப்படுகிறது. ஏஎம்ஹெச் எஸ்எஸ்சி மூலமாக, ஆயத்த ஆடை பயிற்சிக்கான சிறப்பு மையங்கள் திருப்பூர் மற்றும் டெல்லியில் ரூ. 2 கோடி மதிப்பில் உருவாக்கப் பட்டுள்ளன.

திருப்பூரிலுள்ள மையத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக செயலர் கே.பி.கிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். ஏஎம்ஹெச் எஸ்எஸ்சி தலைவர் ஏ.சக்திவேல் வரவேற்றார்.

இதுதொடர்பாக மத்திய அமைச் சக செயலர் கே.பி.கிருஷ்ணன் பேசியதாவது:

2015 -ம் ஆண்டு திறன் மிகு இந்தியா (Skill India Mission) திட்டத் தில், மூன்று அம்சங்கள் வலி யுறுத்தப்பட்டிருந்தன. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் எப் போதும் தொழிலாளர் தேவை உள்ளது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழி லாளர்கள் வேலைக்கு வருகிறார் கள். பின்னலாடை தொழில் துறை யில் தேவையின் அளவை பொறுத்துதான், அவர்களது தேவையை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மூலமாக கற்றுத்தரப்படும் திறன் பயிற்சியும், நிறுவனத்தில் நடைமுறையில் இருக்கும் திற னுக்கும் இடைவெளி இருப் பதாக தொழில்துறையினர் கருது கின்றனர். என்னென்ன திறன் தொழிலாளர்களுக்கு தேவை என் பது இங்குள்ளவர்களுக்கு தெரியும்.

2015-ம் ஆண்டு முதல் அப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்த அணுகுமுறை நல்ல விதத்தில் மாறியுள்ளது. தற்போது தொழில் துறையினரே மையம் அமைத்து, பின்னலாடை நிறுவனத்தில் கண் காணிப்பு மற்றும் நிர்வாகத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, அவர்களுக்கு தேவையான பயிற்சியை பெறுவார்கள். இதன்மூலமாக, 75 முதல் 80 சதவீதம் தேவையுள்ள திறனை நிறுவனங்கள் பெறும் அளவுக்கு, அவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். இந்தத் துறை யில், 2022-ம் ஆண்டுக்குள் ஏஎம்ஹெச்எஸ்எஸ்சி மூலமாக குறைந்தபட்சம் 20 லட்சம் பேருக்கு திறன் பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x