Published : 17 Dec 2018 08:57 AM
Last Updated : 17 Dec 2018 08:57 AM

ஷ்ரவன் குப்தா கருப்புப் பண மோசடி விவகாரம்:  ரூ. 10.27 கோடி சொத்துகளை கைப்பற்றியது அமலாக்கத்துறை

இமார் எம்ஜிஎஃப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷ்ரவன் குப்தாவின் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் உள்ள கருப்புப் பணம் ரூ.10.27 கோடிக்கு ஈடான சொத்து களைக் கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

ரியல் எஸ்டேட் நிறுவனமான இமார் எம்ஜிஎஃப் முன்னாள் நிர் வாக இயக்குநர் ஷ்ரவன் குப்தா ஹெச்எஸ்பிசி கருப்புப்பண மோசடி பட்டியலில் சம்பந்தப்பட்டு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப் பட்டுவந்தார்.

இந்நிலையில், இந்த விசாரணை யில் ஸ்விசர்லாந்தில் உள்ள ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் வங்கியில் (ஹெச்எஸ்பிசி) அவருடைய கணக் கில் 15,40,650 டாலர் இருப்பது தெரியவந்தது. ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 10.27 கோடி. இந்த மதிப்புக்கு ஈடாக புதுடெல்லி பிஜ் வாசன் பகுதியில் உள்ள அவரு டைய விவசாய நிலங்களை அமலாக்கத்துறை கைப்பற்றி யது.

ஹெச்எஸ்பிசி வங்கிக் கணக் கில் உள்ள இந்தத் தொகையை ஷ்ரவன் குப்தா தனது 2006-2007 வருமான வரிக் கணக்கில் குறிப்பிடவில்லை. ஆனாலும், 2011-12 கணக்குத் தாக்கலில் இந்தத் தொகையை குறிப்பிட்டு, அந்தத் தொகைக்கான வரியையும் செலுத்தியுள்ளார்.

ஆனால், குப்தா இந்தத் தொகை எப்படி வந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை சமர்ப் பிக்கவில்லை. எனவே வருமான வரித் துறை அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் பேரில் அமலாக்கத்துறை தற்போது அவரது ரூ. 10.27 கோடி சொத் துகளைக் கைப்பற்றியுள்ளது.

ஹெச்எஸ்பிசி வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலில் 628 இந்தியர்கள் உள்ளனர். ஷ்ரவன் குப்தாவைப் போலவே, டாபர் குழும இயக்குநர் பிரதீப் பர்மனின் பேரிலும் ரூ. 20.87 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x