Published : 16 Dec 2018 08:50 AM
Last Updated : 16 Dec 2018 08:50 AM

வங்கிகள் இணைப்பால் கிளைகள் மூடப்பட வாய்ப்பு: வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் கருத்து

வங்கிகள் இணைப்பால் கிளைகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது வங்கிகளை இணைப்பதால் நிலுவையில் உள்ள கடன்களை மீண்டும் வசூலிக்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். தற்போதைய கால கட்டத்தில் புதிதாக வங்கிக் கிளைகள் தொடங்குவது மிக அவசியமானது. ஆனால், வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை இதற்கு எதிராக உள்ளது.

பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி இணைக்கப் படுவதை கண்டித்து அகில இந்திய வங்கி யூனியனுடன் இணைந்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வரும் 26-ம் தேதி நாடு ழுமுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளது. வங்கிகளுக்கு 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. மறுநாள் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும்.

வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை மிகவும் குறை வாகவே இருக்கிறது. எனவே, இந்தியாவில் வங்கிகளை இணைப் பதற்கு பதிலாக அவற்றின் விரி வாக்க திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். வாராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள், அந்த கடனை மீண்டும் வசூல் செய்ய அனைத்து நடவடிக்கைக ளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். ஆனால், வங்கிகளை இணைப்பதன் மூலம் மத்திய அரசு கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.

விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றின் வாராக்கடன் ரூ.80 ஆயிரம் கோடியாக இருக்கிறது. இந்த வங்கிகளை இணைப்பதால் வாராக் கடன்கள் வசூலாகிவிடுமா என்பது தெரியவில்லை. எஸ்பிஐ-யுடன் ஆறு வங்கிகளை இணைத்த பின்பு அந்த வங்கியின் வாராக்கடன் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரி வித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x