Published : 13 Dec 2018 10:21 AM
Last Updated : 13 Dec 2018 10:21 AM

ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகளில் சமரசம் செய்யக் கூடாது: அர்விந்த் சுப்ரமணியன் கருத்து

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந் தது. இதில் சமசரம் செய்து கொள்ள முடியாது என்று மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த ஐந்தாவது இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது: ரிசர்வ் கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகலை தொடர்ந்து, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்கி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நிய மிக்கப்பட்டுள்ளார். நிதி அமைப்பை மேம்படுத்த இவர் எடுக்க போகும் நடவடிக்கைகள்தான் ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல் பாடுகளை பாதிக்குமா என்பதை தீர்மானிக்கும். தற்போது ரிசர்வ் வங்கி முடிவு எடுத்தலிலும், நிர்வகிப்பதிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

உர்ஜித் படேல் அவரது பதவி காலத்தில் மிகச்சரியான முடிவு களை எடுத்து சிறப்பாக செயல் பட்டார். குறிப்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை திறமையாக கையாண் டார். வங்கிகள் சுதந்திரமாக நிதி வழங்க, ரிசர்வ் வங்கியின் அது சார்ந்த கொள்கைகளை தளர்த்த மத்திய அரசு விரும்புகிறது. மேலும், வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு அதிக நிதி கிடைக்கவும் விரும் பியது. இதற்கு ரிசர்வ் வங்கி அனு மதி அளிக்கவில்லை . உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை பலப்படுத்தினார். இது வருங்காலத்திலும் தொடர வேண்டும் என்று விரும்பினார். கடந்த 2015-ம் ஆண்டு நடந்தது போன்று தற்போதும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் குறித்து ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் உண்மையான பலம் தெரியவரும்.

பாஜக தற்போது முக்கிய மாநில தேர்தல்களில் தோல்வியை சந்தித் துள்ளது. வரும் தேர்தல்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கைகளும் விவசாயிகளுக் கான நலத்திட்டம் சார்ந்தவையாகத் தான் இருக்கும். இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை மாநில அரசுகள் எளிதாக எடுத்து விடும். ஆனால், அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x