Published : 11 Dec 2018 08:22 AM
Last Updated : 11 Dec 2018 08:22 AM

சீனாவின் பெரிய பணக்காரர் பட்டியல்: முதல் இடத்தை இழந்தார் ஜாக் மா

அலிபாபா நிறுவனர் ஜாக் மா, சீனாவின் முதல் பெரிய பணக்காரர் என்ற இடத்தை, ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜு ஜியாயின் என்பவரிடம் இழந்தார்.

போர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் ஜாக் மாவை முந்தியுள்ளார் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜூ ஜியாயின். இவர் 20ம் இடத்தில் உள்ளார். சீனாவின் முதல் பெரிய பணக்காரர் என்ற இடத்தை வகித்து வந்த ஜாக் மா, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 21ம் இடத்தில் உள்ளார். இதன் மூலம் சீனாவின் முதல் பெரிய பணக்காரர் என்ற இடத்தை ஜாக்மா இழந்தார்.

ஜூ ஜியாயின் சொத்து மதிப்பு குறைந்திருந்தாலும், அவரது எவர்கிராண்ட் என்ற நிறுவனத்தின் பங்கு விலை அடைந்த ஏற்றத்தினால், அவர் முதல் பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது. ஜூ ஜியாயின் சொத்து மதிப்பு 36.7 பில்லியன் டாலர். ஜாக் மாவின் சொத்து மதிப்பு 35.4 பில்லியன் டாலராக உள்ளது. இவருக்கு அடுத்த இடத்தில் டென்சென்ட் நிறுவனத்தின் தலைவர் போனி மா ஹூவாதெங் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 35.3 பில்லியன் டாலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x