Published : 10 Dec 2018 08:48 AM
Last Updated : 10 Dec 2018 08:48 AM

இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிகரிக்க புதிய தொழில்துறை கொள்கை தயார்: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

இந்தியத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காகவும், இந்தியாவில் அந்நிய முதலீடு களை அதிகரிப்பதற்காகவும் புதிய தொழில்துறை கொள்கை வகுக்கப் பட்டிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். இந்தப் புதிய கொள்கை அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது.

மத்திய வர்த்தகத்துறை அமைச் சர் சுரேஷ் பிரபு பல்வேறு நாடுக ளில் உள்ள அரசு நிதி நிறுவனங் களோடு பேச்சுவார்த்தை நடத்தி யதில் இந்தியாவில் முதலீடு செய் வதில் சில சவால்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்தியத் தொழில் துறை கொள்கையில் மாற்றங்கள் தேவை என்பதால், இந்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை புதிதாக ஒரு தொழில்துறை கொள்கை வரைவை வகுத்துள்ளது. இந்தப் புதிய தொழில்துறை கொள்கை, இந்தியா வில் அந்நிய முதலீடுகளை அதி கரிக்கும் வகையிலான கட்டமைப்பு களை ஏற்படுத்தும் வகையில் உரு வாக்கப்பட்டுள்ளது என்று அமைச் சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “இந்தியாவின் வேக மான வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அவசியம். அப்போது தான் நாட்டின் நிதி நிலையும், ரூபா யின் மதிப்பும் நிலையாக இருக்கும். ஆனால், சர்வதேச முதலீட்டாளர் கள் இந்தியாவில் முதலீடு செய்வ தில் சவால்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர். இந்தியாவில் சில துறைகளில் அந்நிய முதலீடுகள் செய்யப்படுவதில் வரம்புகள் உள் ளன. ஆவண நடைமுறைகள் அதிக காலம் எடுத்துக்கொள்வதாகக் கூறி யுள்ளனர். மேலும், சரியான நபர் களை அடையாளம் கண்டு முதலீடு செய்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறுகின்றனர். அதேசமயம் இங்கே ஸ்டார்ட் அப்கள் முதலீடுகளைப் பெறுவதில் சவால்களைச் சந்திக் கின்றன. இப்படி ஒருபக்கம் முதலீடு களை வைத்துக்கொண்டு காத்திருக் கிறார்கள், ஒருபக்கம் முதலீடு இல் லாமல் திணறுகிறார்கள். இதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளோம். இதற்காகப் புதிய தொழில்துறை கொள்கை வகுக்கப் பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

சுதந்திரம் பெற்ற பிறகு கொண்டுவரப்படும் மூன்றாவது தொழில்துறை கொள்கை இது. இதற்குமுன் 1956 மற்றும் 1991ல் கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய தொழில்துறை கொள்கை 1991ல் கொண்டுவரப்பட்ட கொள்கைக்கு மாற்றாக இடம்பெறும். இந்தியா வில் அந்நிய முதலீடு 2017-18 நிதி ஆண்டில் 3 சதவீதம் உயர்ந்து 44.85 பில்லியன் டாலராக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x