Published : 20 Oct 2018 09:11 AM
Last Updated : 20 Oct 2018 09:11 AM

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்வு: சொத்து மதிப்பு ரூ. 440 லட்சம் கோடி 

கடந்த 12 மாதங்களில் இந்தியா விலுள்ள கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை 7300 அதிகரித்து 3.43 லட்சமாக உயர்ந்துள்ளதாக கிரெடிட் சூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வோராண்டும் கிரெடிட் சூயிஸ் சர்வதேச சொத்து அறிக் கையை வெளியிடுகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கை யில் 2018 இதுவரையி்லான கடந்த 12 மாத காலத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தக் காலத்தில் புதிதாக 7300 பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்கள். இந்தியக் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 440 லட்சம் கோடி (6 ட்ரில்லியன் டாலர்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தி யாவில் தனிநபர் ஒருவரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5 லட்சமாக உள்ளது.

பெண் பணக்காரர்கள் எண்ணிக் கையில் மற்ற நாடுகளைக் காட்டி லும் 18.6 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா முன்னிலையில் உள்ளது.

புதிதாகச் சேர்ந்துள்ள இந்தியப் பணக்காரர்களில் 3400 பேர் ரூ. 350 கோடிக்கு மேலான சொத்து களையும், 1500 பேர் ரூ. 700 கோடிக்கு மேலான சொத்துகளை யும் வைத்துள்ளனர்.

இந்தியப் பணக்காரர்களின் மொத்த சொத்துகளில் 91 சதவீதம் ரியல் எஸ்டேட் போன்ற அசையாச் சொத்துகளாக உள்ளன. கடந்த 12 மாத காலத்தில் இந்த வகை சொத்துக்கள் 4.3 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன.

2023-ல் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5.26 லட்சமாகவும், மொத்த சொத்து மதிப்பு ரூ. 645 லட்சம் கோடியாகவும் உயரும் என கிரெடிட் சூயிஸ் கணிப்பும் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் தொடர்ந்து 10-வது ஆண்டாக அமெரிக்கா 98 ட்ரில்லியன் டாலருடன் முத லிடத்தை வகிக்கிறது. சீனா 52 ட்ரில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x