Published : 20 Oct 2018 09:09 AM
Last Updated : 20 Oct 2018 09:09 AM

2017-ல் 50,000 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை 

2017-ம் ஆண்டில் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு குடியுரிமை வழங்கியிருப்பதாக அமெரிக்க உள்நாட்டுப் பாது காப்புத்துறை சமீபத்தியில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளது.

ட்ரம்ப் அதிபரான பிறகு அமெ ரிக்காவில் குடியுரிமை பெறுவது சிக்கலுக்குள்ளாகிவந்தது ஆனால், சமீபத்தில் வெளியாகி யுள்ள அறிக்கையில் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டி லும் 2017-ம் ஆண்டில் கூடுத லாகக் குடியுரிமை வழங்கப்பட் டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாது காப்புத்துறை சமீபத்தில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் 2017-ல் மட்டுமே 50802 இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. இது எண்ணிக்கை யில் 2016-ம் ஆண்டில் 46,188 ஆக வும், 2015-ல் 42,213 ஆகவும் இருந்துள்ளது.

2017-ல் மொத்தமாக அமெ ரிக்கா வழங்கிய குடியுரிமை 7,07,265. இதில் 1,18,559 குடி யுரிமைகளைப் பெற்று மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திலும், சீனா 37,674 குடியுரிமையுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது பிலிப் பைன்ஸ், டொமினிக்கன் குடியரசு, கியூபா உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இந்நிலையில் ஹெச் 1பி விசா விதிமுறைகளில் வரும் 2019 ஜனவரியில் மீண்டும் திருத்தங் களைச் செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x