Published : 17 Oct 2018 12:03 PM
Last Updated : 17 Oct 2018 12:03 PM

ஹெச்1 பி விசா காலம் குறைப்பு; அமெரிக்க குடியுரிமை அமைப்பின் மீது வழக்கு: ஆயிரத்துக்கும் மேலான ஐடி நிறுவனங்கள் புகார்

அமெரிக்க நிறுவனங்களில் பணி யாற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசா வுக்கான கால அளவைக் குறைத் துள்ளதற்கு ஐடி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

விசா வழங்கும் அமெரிக்க குடியுரிமை அமைப்பு (யுஎஸ் சிஐஎஸ்) மீது ஐடி நிறுவனங் கள் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக் கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சார்பில் அவற்றின் பிரதிநிதி அமைப்பு இந்த வழக்கை பதிவு செய் துள்ளது. இந்நிறுவனங்கள் பெரும் பாலும் அமெரிக்க வாழ் இந்தியர் களால் நடத்தப்படுபவை ஆகும்.

ஹெச் 1 பி விசா என்பது நிரந்தர குடியுரிமை வழங்கும் விசா அல்ல. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை அவர்களின் திறமை அடிப்படை யில் பணி அமர்த்த அனுமதிக்கும் விசாவாகும். இந்த விசா 3 ஆண்டு கள் முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணிபுரிவதற்கு வழங்கப்படுகிறது.

ஆனால் கடந்த மாதம் யுஎஸ் சிஐஎஸ் அமைப்பானது மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு அனுமதி வழங்கி யுள்ளது. இதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் யுஎஸ்சிஐஎஸ் அமைப்பானது ஹெச்1பி விசா விதிமுறைகளுக்கு மாற்று அர்த்தம் கற்பிப்பதோ அல்லது விசா காலத்தை குறைப் பதோ தவறான நடைமுறை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை இதற் கான உரிமையை வழங்கியுள்ளது. அதன்படி பணிக் காலம் 3 ஆண்டு களாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எப்போது தேவை என் பதையும் அதை யுஎஸ்சிஐஎஸ் வரையறுப்பதையும் ஏற்க முடி யாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யுஎஸ்சிஐஎஸ் அமைப்பின் மீது தொடரப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும். கடந்த ஜூலை மாதம் முதலாவது வழக்கு தொடரப்பட்டது. அதில் யுஎஸ்சிஐஎஸ் அமைப்பானது ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் மொழி தேர்வை ரத்து யுஎஸ்சிஐஎஸ் ரத்து செய் ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹெச் 1 பி விசா அனுமதி வழங்கு வதில் உரிய நடைமுறை பின்பற்றப் படவில்லை. ஆனால் எந்த காரணத் துக்காக ரத்து செய்யப்படுகிறது என்ற விவரத்தையும் தெரிவிப்ப தில்லை என்று ஐடி செர்வ் அமைப்பின் தலைவர் கோபி கந்துக்ரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x