Published : 16 Oct 2018 08:08 AM
Last Updated : 16 Oct 2018 08:08 AM

6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்

2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங் களில் 100 கோடி ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக கெமல்டோ என்ற சர்வதேச அளவிலான இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெமல்டோ என்ற சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம், இணையத்தில் நடைபெறும் தகவல் கசிவு தொடர்பான விவரங்களைச் சேகரித்துவருகிறது. மேலும் இணையப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கை களுக்குத் தேவையான சேவைக ளையும் கெமல்டோ செய்து வருகிறது.

இந்நிறுவனம் சமீபத்தில் ஆதார் தகவல்களில் நடந்த அத்துமீறல் களைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தகவல் பாதுகாப்பு அத்துமீறல்கள்

இந்த அறிக்கையில் ஆதார் தக வல் அத்துமீறல் நிகழ்வுகளில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங் களில் 100 கோடி அளவிலான தனி நபர் தகவல்கள் கசிந்துள்ளதாகக் கூறுகிறது. இவற்றில் தனிநபரு டைய பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களும் அடங் கும். மேலும் இதில் கவலை தரும் விஷயம் என்னவெனில், கசிந் துள்ள தகவல்களில் 12ல் ஒரு தகவல் மட்டும்தான் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கெமல்டோ கூறியுள்ளது.

உலக அளவில் இந்த வருடத் தின் முதல் ஆறு மாதத்தில் 945 தகவல் அத்துமீறல்கள் நடந்துள்ள தாகவும் அதன் மூலம் 450 கோடி தகவல்கள் கசிந்துள்ளதாகவும் கெமல்டோ கூறுகிறது. இது கடந்த 2017ம் ஆண்டின் இதே காலகட் டத்தில் கசிந்த தகவல் களைக் காட்டிலும் 133 சதவீதம் உயர்வு என்று கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x