Published : 15 Oct 2018 09:14 AM
Last Updated : 15 Oct 2018 09:14 AM

இந்தியாவில் திரட்டும் தகவல்களை இந்தியாவிலேயே பாதுகாக்க சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்களுக்கு ஆர்பிஐ கெடு: இன்று முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்

சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள் இந்தியாவில் திரட்டும் தகவல் களை இந்தியாவிலேயே பாது காக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அளித்த வழிகாட்டுதலை இன்று முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள் இன்று முதல் இதனை நடைமுறைப்படுத்தும் கட்டாயம் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்தவர் கள் கூறுகையில், சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள் தங்களது இந்திய செயல்பாடுகளின்போது திரட்டும் தகவல்களை இந்தியாவி லேயே சேமிக்க வேண்டும். இதற் கான கட்டமைப்பை ஆறு மாதங் களில் உருவாக்கிக் கொள்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் இன்றுடன்( அக் டோபர் 15) முடிவடைகிறது. இந்த விஷயத்தில் விதிமுறைகளை தளர்த்தவோ, அவகாசத்தை நீட்டிக் கவோ ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்று கூறினர். பொது நலன் கருதி இதனைக் கட்டாயம் நடை முறைப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பான அறிவிப்பினை ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதத் தில் வெளியிட்டிருந்தது. அதில் நிதிச் சேவைகளை வழங்கும் சர்வ தேச நிறுவனங்கள் இந்திய வாடிக் கையாளர்களின் பரிவர்த்தனை தகவல்களை இந்தியாவிலேயே பாதுகாக்க வேண்டும். அக்டோபர் 15-ம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இந்த விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வர வேண்டும்.

ஆனால் சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள் இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளன. எனினும் ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

உள்நாட்டு நிதிச் சேவை நிறு வனங்கள் இந்த வழிகாட்டுதலை வரவேற்றன, எனினும் சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள் இந்தியா வில் இதற்கான செலவுகள் அதிகரிக் கும் என்பதால் தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிறுவனங்களுட னான ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கூட்டத்தில் இது தொடர்பாக விவா திக்கப்பட்டுள்ளது. முதன்மை தக வல்களை அவர்களின் மையப் படுத்தப்பட்ட சர்வர்களில் சேகரிக் கும் முன்வரைவை ஆர்பிஐ நிரா கரித்தது.

கடந்த வாரத்தில்நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவில் சிறப் பான நிதிச் சேவைகளை வழங்க கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளுமாறு ஆர்பிஐ தனது அறிக் கையில் கூறியிருந்தது. இந்திய வாடிக்கையாளர்கள் மேற்கொள் ளும் பரிவர்த்தனைகள் முதல் முடிவு வரையிலான அனைத்து தகவல்க ளும் இந்தியாவிலேயே சேமிக்கப் படும் வகையிலான வசதியை அனைத்து கணினி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக் க செனட்டின் இரண்டு உறுப்பினர் களான ஜான் கார்ய்ன் மற்றும் மார்க் வார்னர் இருவரும் எழுதியுள்ள கடி தத்தில், இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்க நிறுவனங்களைப் பாதிக் கும் எனவே இந்த முடிவை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

உங்களது பொருளாதார இலக்கு களை புரிந்து கொள்கிறோம். ஆனால் இதன் மூலம் இந்திய குடி மக்களின் தகவல்களை பாது காத்துவிட முடியாது என்று குறிப்பிட் டுள்ளனர்.

நாடுகடந்து செல்லும் தகவல் கள் எந்த நாட்டிலிருந்து வெளியா கிறது என்பது தெரிந்து கொள்ள முடியாத நிலையில், தகவல்களை இந்தியாவிலேயே பாதுகாப்பதன் மூலம் அவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் என்று ஆர்பிஐ நம்புவதால் இந்த நடவடிக் கையினை மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x