Published : 02 Oct 2018 09:29 AM
Last Updated : 02 Oct 2018 09:29 AM

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிதி நெருக்கடி விவகாரம்; நிறுவனத்தைக் கைப்பற்றியது அரசு: உதய் கோடக் தலைமையில் இயக்குநர் குழு அமைப்பு

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தை அரசு கைப்பற்றியுள்ளது. மேலும், உதய் கோடக் தலைமையில் ஆறு பேர் கொண்டபுதிய இயக்குநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் கடந்த சில மாதங்களில் செலுத்த வேண்டிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் திவாலாகும் நிலையில் இருப்பது தெரியவந்தது.

நாட்டின் பொருளாதாரத்தில் மிகமுக்கியப் பங்கு வகிக்கும் நிறுவனமாக இது இருப்பதால் உடனடியாக இந்நிறுவனத்தின் திவால் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

இல்லையென்றால், பொருளாதாரத்திலும், வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் துறையிலும் இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும்அச்சம் இருந்தது.

 இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் ஒதுங்கிக்கொண்ட அரசு, பிரச்சினையின் தீவிரம் கருதி தற்போது தீர்வு காண முன்வந்துள்ளது. தேசியநிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், இவ்விவகாரத்தில் தலையிட்டு நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகிகள்வெளியேறவும், நிறுவனவிவகாரங்கள் துறை அமைச்சகம் இந்நிறுவனத்தைக் கைப்பற்றவும் அனுமதித்துள்ளது.

மேலும் உதய் கோடக் தலைமையில் ஆறு பேர் கொண்ட புதியஇயக்குநர் குழுவை அமைத்துள்ளது. முன்னாள் ஐசிஐசிஐ வங்கித்தலைவர் ஜி.சி சதுர்வேதி, முன்னாள்ஐஏஎஸ் அதிகாரியும், டெக் மஹிந்திரா தலைவருமான வினித் நய்யார், முன்னாள் செபி தலைவர் ஜி.என்.பாஜ்பேய், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மாலினி சங்கர், நந்தா கிஷோர் ஆகியோர் இயக்குநர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

நிறுவனத்தை மறுகட்டமைக்கும் நடவடிக்கைகளை புதிய இயக்குநர் குழு எடுக்கும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 2009ல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஐஎல் அண்ட் எஃப் எஸ் கடன்மொத்தமாக ரூ. 91 ஆயிரம் கோடி.இதில் 61 சதவீதம் வங்கிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மீண்டும் அக்டோபர் 31ம் தேதி ஐஎல் அண்ட் எஃப் எஸ் நிறுவன விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x