Published : 26 Sep 2018 08:35 AM
Last Updated : 26 Sep 2018 08:35 AM

இந்தியா - பாக் இடையே 3700 கோடி டாலர் வர்த்தக வாய்ப்பு; 1209 பொருட்கள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தடை: உலக வங்கி அறிக்கை

இந்தியா பாகிஸ்தான் இடையே 3700 கோடி டாலர் அளவுக்கு வர்த்தக வாய்ப்புள்ளன என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. எனினும் தொடர்ச்சியான அரசியல் பதட்டம் காரணமாக இரு தரப்புக்குமான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா பாகிஸ்தான் இடையே 3700 கோடி டாலர் வர்த்தக வாய்ப்பு உள்ளன. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்து வரும் அரசியல் பகைமை காரண மாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் தெற்காசிய அளவி லான வர்த்தக ஒப்பந்தங்களிலும் இதன் தாக்கம் உள்ளது என்று குறிப் பிட்டுள்ளது.

`தெற்காசிய அளவிலான மண் டல வர்த்தக உறுதி’ என்கிற அறிக் கையினை உலக வங்கி வெளியிட் டுள்ளது. அதில், தெற்காசிய அளவி லான வர்த்தகக் காரணிகளை சுட்டிக் காட்டியுள்ளது.

வர்த்தகக் கட்டுபாடுகள்

இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக வர்த்தகக் கட்டுப் பாடுகள் நீடிக்கின்றன. இதனால் பல முக்கியப் பொருட்களும் திறந்த வர்த்தகத்துக்குள் வராமல் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் இயல்பான வர்த்தக உறவிலும் சிக்கல் இருப்பதால், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலி தொடர் உத்திகள் பாதிக்கப்பட் டுள்ளன. உயர் மதிப்பிலான வர்த் தகத் துறை தேக்கமடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசிய பிராந்திய நாடுகளில் இருந்து 936 பொருட்களை திறந்த வர்த்தகத்தின் மூலம் பாகிஸ் தான் இறக்குமதி செய்ய அனு மதிக்கிறது. இது அந்த நாட்டு இறக்கு மதியில் 17.9 சதவீதமாகும். இந்தியா திறந்த வர்த்தகத்தில் 25 பொருட்களை அனுமதிக்கிறது.

இலங்கையில் இருந்து 64 பொருட்களை வர்த்தக கட்டுப்பாடு களுடன் பாகிஸ்தான் அனுமதிக் கிறது. ஆனால் இலங்கையுடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா திறந்த வர்த்தகம் மேற் கொள்கிறது.

தெற்காசிய அளவிலான வர்த்த கத்தில் பாகிஸ்தான் 82.1 % பொருட் களை வர்த்தக கட்டுப்பாடுகளு டன் இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இந்தியா விலிருந்து 1209 பொருட்கள் இறக்குமதி செய்வதை பாகிஸ் தான் நீண்ட காலமாகவே தடை செய்து வைத்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் இறக்குமதி செய்ய தடை செய்துள்ள பல பொருட்கள் அந்த நாட்டு வழியாக சவுதி அரேபிய நாடுகளுக்கு இந் தியா ஏற்றுமதி செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வாகா வழி யாக 138 பொருட்களை மட் டுமே இறக்குமதி செய்ய பாகிஸ் தான் அனுமதிக்கிறது. இந்த வழியில் பொருட்களைக் கொண்டு செல்லும் டிரக்குகள் எல்லைக் கோடு வரை மட்டுமே அனுமதிக் கப்படுகின்றன. அதன் பின்னர் வேறு டிரக்குகளுக்கு பொருட்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நேரமும், செல வும் அதிகரிக்கிறது என்றும் குறிப் பிட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x