Published : 26 Sep 2018 08:34 AM
Last Updated : 26 Sep 2018 08:34 AM

கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை: வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தல்

மோசடி செய்வோர் மற்றும் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி யாளர்களுக்கு மத்திய நிதி அமைச் சர் அருண் ஜேட்லி வலிறுத்தி கூறினார்.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் பங் கேற்றனர். இதில் பேசிய ஜேட்லி, வங்கிகள் கடன் வழங்குவது மற்றும் அதை வசூலிப்பதில் போதிய கவ னம் செலுத்தவேண்டும். பணத் தைப் பெற்று அதை திரும்ப செலுத் துவதற்கு போதிய அளவு நிதி இருந்தும் அதை செலுத்தாமல் இருப்போர் மீதும், மோசடி புரிவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் நேர்மை யானவர்களுக்கே கடன் கொடுக் கும் என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மூன்று பொதுத்துறை வங்கிக ளான பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைப்பது தவிர்த்து அதற்கு மாற்று வழி (ஏஎம்) குறித்து இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இவ் வாறு இணைப்பதன் மூலம் ஒருங் கிணைந்த வங்கியின் நிதி ஆதாரம் அதிகரிக்கும். இது சர்வதேச வங்கி களுக்கு இணையானதாக உரு வாகும்.

வங்கிகள் வழங்கிய கடனை வசூலிக்க தேவையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். இவ் விதம் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வசூலான தொகை ரூ. 36,551 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத் தில் வசூலான தொகையை விட 49 சதவீதம் அதிகமாகும். 2017-18-ம் நிதி ஆண்டில் வங்கிகள் வசூலித்த கடன் தொகை ரூ. 74,562 கோடி யாகும்.

இந்தியப் பொருளாதாரம் தனது வழக்கமான பாதைக்குத் திரும் பிக் கொண்டிருக்கிறது. மேலும் பெருமளவிலான முதலீடுகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் வருகிறது. மக்களிடையே வாங் கும் திறன் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா ஸ்திரமான 8 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று ஜேட்லி தனது ட்விட்டர் செய்தியில் பதிவிட்டுள்ளார்.

திவால் மற்றும் நிதி மோசடி மசோதா சட்டத்தின் காரணமாக பொருளாதார வளர்ச்சி சீராக முன் னேறி வருகிறது. பண மதிப்பு நீக்கம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை காரண மாக நிதி நிலை மேம்பட்டுள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x