Published : 25 Sep 2018 08:48 AM
Last Updated : 25 Sep 2018 08:48 AM

அமெரிக்காவின் ‘எச்4 விசா’ - இந்தியர்கள் பெறும் சலுகையா? 

அமெரிக்காவில் பணி புரியும் இந்தியர்களுக்கு, கடும் சோதனை உருவாகி இருக்கிறது. ஊழியர் களின் குடும்பத்தினருக்கு வழங்கப் படும் எச்4 விசா, விரைவில் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

‘Save Jobs USA' என்கிற அமெரிக்க தொழிலாளர் அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கு பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இன்னும் மூன்று மாதங் களில் ‘எச்4' விசா வழங்குவது நிறுத்தப்பட்டு விடும் என்று கூறி யுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த அறி விப்பால் பல்லாயிரக் கணக்கான இந்தியக் குடும்பங்கள் நேரடி யாகப் பாதிக்கப்படும். உள்நாட்டில் வேலைவாய்ப்பு மேலும் இறுக்க மான சூழலை எதிர் கொள்ள நேரும்.

அமெரிக்க வேலை என்றாலே மேல்தட்டு வர்க்கத்தின் பிரச்சினை என்கிற பொய்யான தோற்றம் காரணமாக அரசும் அரசியல் தலை வர்களும் மௌனமாக உள்ளனர். ஆனால் உண்மையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அமெரிக்க வேலை வாய்ப்பு பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை முதல் மண்டல அமைப்புகள் வரை எங் கும், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு எதிரான சட்டங்களை தடுப்பதே இல்லை. ஆனால், வேலை வாய்ப்புகளை நிராகரிப் பதில் மட்டும் முழு மூச்சுடன் தீவிரமாக இருக்கின்றனர்.

அமெரிக்க நிறுவனங்களில், ‘இந்தியப் பணியாளர்களின் பங் களிப்பு: அவர்களின் ஊதியம்' என்னும் சமன்பாட்டில், அதிக ஆதா யம் யாருக்கு என்பதை கவனித் தால் உண்மை நிலை புரியும். இந்தியப் பணியாளர்களை சேர்த் துக்கொள்ள மாட்டோம் என்று எந்த அமெரிக்க நிறுவனமும் அறிவிக்காததற்கு காரணமும் இது தான். உண்மையில் இது, இருவருக் குமே பயன் தருகிற (அ) இரு வரையுமே பாதிக்கிற ‘வின்-வின்' நிலைமை.

அமெரிக்க உறவு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம், 2017 ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கை இரண்டு கோட்பாடுகளை முன் வைக்கிறது.

‘சலே.. சாத்.. சாத்..' (ஏறத்தாழ) கைகோர்த்துக் கொண்டு செல் வோம்; ‘சன்ஜ்ஹா ப்ரயாஸ், சப் கா விகாஸ்' அதாவது, ‘பங்கிடப்பட்ட முயற்சி, எல்லோருக்கும் முன் னேற்றம்'.

இதன் பொருள் - ‘இருவரும் சம பங்குதாரர்கள்; இணைந்து செயல் படுவோம்;ஆதாயங்களை சமமா கப் பங்கிட்டுக் கொள்வோம்'.கள நிலவரமும் இப்படித்தான் இருக் கிறது.

அமைச்சகத்தின் அறிக்கைப்படி, அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்றுமதி - இறக்குமதியில் பெரிய இடைவெளி இல்லை. அதிலும், ‘சேவைத் துறை', சம நிலைக்கு நெருங்கியே உள்ளது.

அமெரிக்காவில் தற்போது சுமார் 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டு மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீதம். இதனோடு, 2016 ஜூன் மாதம், ‘உலக நுழைவு நிகழ்வு' (Global Entry Programme) தொடர்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.

இவற்றை எல்லாம் ட்ரம்ப், ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ரஷ்யா, ஈரான், பாலஸ்தீனத் துடன் நமது உறவை, தனக்கு ஏற்றாற் போல், மாற்றத் துடிக்கிறார் ட்ரம்ப். அது சாத்தியம் இல்லை என்பதால், ‘விசா' காட்டி, அச்சுறுத்துகிறாரோ என்று தோன்றுகிறது.

அமெரிக்கா, சீனா உட்பட, எல்லா நாடுகளுக்குமே இந்தியாவுடனான வர்த்தகம் மிக இன்றியமையாதது. இதனைத் தியாகம் செய்ய, எந்த நாட்டு அரசும், அதிபரும் தயாராக இல்லை. பிறகு என்ன..?

துருப்புச் சீட்டு இந்தியாவின் கையில். நம் தலைவர்கள் சாமர்த் தியமாக ஆடுவதில் இருக்கிறது -இளைஞர்களின் எதிர்காலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x