Published : 25 Sep 2018 08:46 AM
Last Updated : 25 Sep 2018 08:46 AM

வளரும் நாடுகளின் உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க கைகோர்க்கும் கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் 

வளரும் நாடுகளில் எதிர்காலத்தில் வரப்போகும் உணவுப் பஞ்சத்தை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க் கும் முயற்சியில் சர்வதேச அமைப் புகளுடன் கணினி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமே சான், மைக்ரோசாஃப்ட் மூன்றும் கைகோர்த்துள்ளன. உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த 21ம் நூற் றாண்டிலும் கோடிக் கணக்கான மக்கள்-அதில் பெரும்பாலானவர் கள் குழந்தைகள்- சத்துக் குறை பாட்டினாலும், உணவுப் பஞ்சத் தாலும் பாதிக்கப்பட்டு இறக்கும் பரிதாப நிலையில் உள்ளனர். இனி யும் இப்படி ஒரு நிலை ஏற்படக் கூடாது என்பதால் உலகளாவிய கூட்டணியை உருவாக்கி செயல் படவுள்ளோம்” என்றார்.

இதற்காக பஞ்சம் தடுப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி யுள்ளனர். இந்த பஞ்சம் தடுப்பு அமைப்பில், உலக வங்கி, ஐக் கிய நாடுகள் சபையுடன், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங் களான கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மூன்றும் இணைந்து செயல்படவுள்ளன.

தகவல் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற் றின் உதவியால் முன்கூட்டியே வளரும் நாடுகளின் உணவுப் பஞ் சத்தைக் கண்டறிந்து, தேவையான நிதி திரட்டி தவிர்க்க முடியும் என்கின்றன இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள்.

இதற்காக இந்த நிறுவனங்கள் இணைந்து, “ஆர்டெமிஸ்” என்ற சிஸ்டத்தை உருவாக்கியுள்ளனர். வரும் அக்டோபர் 13ல் இந்தோனே சியாவின் பாலியில் நடக்கும் ஐஎம் எஃப்-உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தில் இதுகுறித்து மேலும் விவாதிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x