Published : 25 Sep 2018 08:45 AM
Last Updated : 25 Sep 2018 08:45 AM

ரூ. 5,000 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட நிதின் சந்தேசரா குடும்பத்தினருடன் நைஜீரியாவுக்குத் தப்பி ஓட்டம்

ரூ. 5,000 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற நிதின் சந்தேசரா கடந்த மாதம் துபாயில் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்தத் தகவல் பொய் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவ ரும், அவரது குடும்பத்தினரும் நைஜீ ரியாவுக்குத் தப்பிச் சென்றிருக் கலாம் என்று முன்னணி ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த ஸ்டெர் லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான நிதின் சந்தேசரா, அவரது உறவினர்களும் ரூ. 5,000 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட தாகக் குற்றம் சாட்டப்பட்டனர். இவர் கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

சிபிஐ, அமலாக்கப்பிரிவின் விசா ரணையில் சந்தேசரா இந்தியா விலும், வெளிநாட்டிலுமாக 300க் கும் மேலான ஷெல் கம்பெனிகளை உருவாக்கி, பினாமிகளை வைத்து அவற்றை இயக்கியதாகத் தெரிய வந்தது. மேலும் அந்த ஷெல் கம் பெனிகள் மூலம் போலியான நிதி அறிக்கைகள், போலி விற்பனை, வருமான ஆவணங்கள் மூலம் வங்கி களில் பெருமளவில் கடன் மோசடி செய்தார். பங்குச் சந்தையிலும் பெருமளவில் மோசடி செய்தார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜூன் மாதம் அமலாக்கப்பிரிவினர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககன் தவா னையும், அனுப் கார்கையும் இந்த வழக்கில் கைது செய்தனர். மேலும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத் தின் ரூ. 4,700 கோடி சொத்துகளை யும் பறிமுதல் செய்தனர். ஆனாலும் முக்கியக் குற்றவாளியான நிதின் சந்தேசரா தப்பிச் சென்றார். அவரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணைக்குட்படுத்த வேண்டியது முக்கியமானது என்று அமலாக்கப்பிரிவு கூறியது. ஏனெ னில் இந்த மோசடியில் பெரும் பாலான பணத்தை வெளிநாட் டுக்குக் கொண்டுசென்று விட்டதா கக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் சந்தேசரா துபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிக்கை வெளி யானது. ஆனால் ஒரு மாதங்கழித்து தற்போது அவர் கைது செய்யப்பட வில்லை என்றும், நிதின் சந்தேசரா, அவரது சகோதரர் சேத்தன் சந் தேசரா, அவரது மைத்துனி தீப்தி பென் சந்தேசரா ஆகிய மூவ ரும் நைஜீரியாவில் தஞ்சமைடைந் திருக்கலாம் என்றும் தற்போது முன்னணி ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நைஜீரியாவைப் பொறுத்தவரை இந்திய அரசு அந்நாட்டு அரசுக்கு அவர்களை நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்கவோ அல்லது பரஸ்பர சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக் கவோ உத்தரவிடும் அளவுக்கு உறவுநிலையில் இல்லை என் பதால் அவர்களை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும் முக்கிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்திய குற்ற விசாரணை அமைப்புகள் ஐக்கிய அமீரக அதிகாரிகளுக்கு அவர்கள் கண்ணில் பட்டால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விண்ணப்பக் கடிதம் அனுப்ப திட்ட மிட்டுள்ளனர். மேலும், இன்டர் போல் அமைப்பு மூலம் சந்தேசரா ஸுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x