Published : 23 Sep 2018 09:51 AM
Last Updated : 23 Sep 2018 09:51 AM

விவசாயிகளுக்கு உதவும் செயலி: டாஃபே நிறுவனம் அறிமுகம்

விவசாயிகள் பயன்பெறும் வகை யில் செயலி (ஆப்) ஒன்றை டிராக்டர் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டாஃபே நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

ஜேஃபார்ம்சர்வீசஸ் ஆப் (jfarm services App) என்ற பெயரிலான இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்களது டிராக்டர் மற்றும் விவசாயக் கருவிகளை மற்ற விவசாயிகளுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் மூலம் விவ சாயிகளின் வருமானம் அதிகரிக் கும். இடைத்தரகர் எவருமின்றி விவசாயிகள் இந்த செயலி மூலம் வாடகையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

டாஃபே நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) கீழ் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தெரிவித்தார். இந்தியா வில் 20 கோடி விவசாயிகள் நவீன கருவிகளை பயன்படுத்த வழியின்றி உள்ளனர். இந்த செயலி மூலம் டிராக்டர், விதைப்பு இயந்தி ரம், அறுவடை இயந்திரங்களை வாடகைக்குப் பெற முடியும். இவற்றை சொந்தமாக வைத்திருக் கும் விவசாயிகள் தங்களது சொந்த உபயோகம் தவிர பிற சமயங்களில் வெறுமனே வைத் திருக்கின்றனர். இவற்றை வாட கைக்கு விடுவதன் மூலம் விவசாயி களுக்கு வருமானமும் கிடைக்கும்.

இந்த செயலியை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத் தரப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் சோதனை ரீதியில் செயல் படுத்தி பார்த்தனர். அப்போது 60 ஆயிரம் விவசாயிகள் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x