Published : 23 Sep 2018 09:49 AM
Last Updated : 23 Sep 2018 09:49 AM

நிதி மோசடி எதிரொலி; ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன சிஇஓ ரமேஷ் பாவா ராஜினாமா 

இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் முக்கிய நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத் திலிருந்து அதன் நிர்வாக இயக்கு நரும், தலைமைச் செயல் அதிகாரி யுமான ரமேஷ் பாவா ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று அந்த நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் கடனை திருப்பி அளிப்பதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடு பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் நிர்வாக ரீதியாகவும் பல முறைகேடுகளை செய்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தனது பதவியை பாவா ராஜினாமா செய்துள்ளார்.

இவரைத் தவிர தினசரி பொறுப்பு கள் இல்லாத நான்கு இயக்குர் நகளான ரேணு சாலு, சுரீந்தர் சிங், சுபலக்‌ஷ்மி பான்சே மற்றும் உதய் வேத் ஆகியோரும் பதவி விலகல் கடிதத்தினை அளித்துள்ளனர். மற்றொரு செயல் இயக்குநரான விபவ் கபூரும் விலகியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை யினை ஐஎல் அண்ட் எப்எஸ் முதலீட்டு நிறுவனத்தின் மேலாளர் கள் பங்குச் சந்தைக்கு அனுப்பியுள் ளனர்.

நிர்வாக மாற்றம்

இதற்கிடையே இந்த குழுமத்தின் மற்றொரு நிறு வனமான ஐஎல் அண்ட் எப்எஸ் டிரான்ஸ்போர்டேஷன் நெட் வொர்க் நிறுவனம் கூறுகையில்,

நிறுவனத்தினுடைய திட்டங்கள் மற்றும் திரட்டப்படும் முதலீடுகளை ஆய்வு செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். தலைமை நிதி அதிகாரியாக உள்ள திலீப் பாட் டியா பொறுப்புகளில் இருந்து விடு விக்கப்பட்டு, தலைமை உத்தி அதிகாரியாக செயல்படுவார். நிறுவ னத்தின் அனைத்து பொறுப்புகளை யும் உடனடியாக திலீப் பாட்டியா கவனிப்பார் என்றும் பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கை யில் கூறியுள்ளது.

தலைமை நிதி அதிகாரி பொறுப் பிற்கு தகுதிவாய்ந்த நபர்களை நியமனம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை குளறுபடி கள் மற்றும் நிர்வாக மோசடிகள் காரணமாக தற்போது நிறுவனத்தின் மொத்த செயல்பாடுகளும் செபி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்பு களின் சோதனைக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

சிட்பி வங்கியில் வாங்கிய குறுகிய கால கடன் ரூ.1,000 கோடி மோசடி விவகாரம் கடந்த மாதத்தில் வெளிவரத் தொடங்கியது. மேலும் ரூ.500 கோடி கடனை திருப்பி அளிப்பதிலும் நிறுவனம் மோசடி யில் ஈடுபட்டுள்ளது தெரிய வந் துள்ளது.

ஐஎல் அண்ட் எப்எஸ் நிறு வனத்தின் மொத்தக் கடன் ரூ.35,000 கோடியாக உள்ளது. ஐஎல் அண்ட் எப் எஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனம் ரூ.17,000 கோடி கடன் வைத்துள்ளது. நொமுரா இந்தியா அறிக்கையின்படி இது பல வங்கிகளில் வாங்கப்பட்டு வாராக்கடனாகியுள்ளது.

ஐஎல் அண்ட் எப்எஸ் குழு மம் தனது திட்டங்களுக்காக வாங் கிய பல்வேறு நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்கள் வாராக்கடன் ஆகியுள்ளன. இந்த வாராக்கடன் கள் குறித்து முழுமையாக தெரி யாததால் கட்டுப்பாட்டு அமைப்பு களால் விசாரணை தாமதமாகி யுள்ளது.

தற்போது மோசடிகள் வெளிச் சத்துக்கு வந்துள்ளதால் செபி, ரிசர்வ் வங்கி, நிறுவனங்கள் விவ கார அமைச்சகம், நிதி அமைச்சகம் போன்றவற்றின் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வரப்பட்டுள் ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x