Published : 22 Sep 2018 10:17 AM
Last Updated : 22 Sep 2018 10:17 AM

ஜிஎஸ்டி வரி விதிமுறைகளை மீறியதால் யெஸ் வங்கிக்கு ரூ. 38 கோடி அபராதம்

உள்நாட்டு ரெமிடன்ஸில் விதி களை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ. 38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு வங்கிப் பரிவர்த்தனைகளுக் கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்படுவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அபராதத் தொகையை செலுத்திவிட்டதாக வங்கி அதி காரிகள் தெரிவித்தனர். இருப் பினும் விதிமீறல் எதுவும் நடைபெற வில்லை என்றும் யெஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பங்கு வர்த் தகத்தில் இந்த வங்கியின் பங்கு அதிகபட்சமாக 35 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தகம் முடிவில் 29 சதவீத சரிவை கண்டிருந்தது.

நகர்பகுதிகளில் உள்ளவர்கள் கிராமப்பகுதிகளில் உள்ள தங்க ளது உறவினர்களுக்கு பணம் அனுப்பியுள்ளனர். இதில் வங்கி அதிகாரிகள் வரி செலுத்தப்பட்ட தாக தெரிவித்து பண பரிவர்த் தனை செய்துள்ளனர். ஜிஎஸ்டி துறைக்கு ரூ. 32 கோடியும் சேவைத் துறைக்கு ரூ. 6 கோடியும் அபராத மாக செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x