Published : 22 Sep 2018 10:16 AM
Last Updated : 22 Sep 2018 10:16 AM

அதிர்ச்சி அடைய வைத்த பங்குச்சந்தை: சில நிமிடங்களில் சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தை வர்த்தகத் தில் இதுவரை இல்லாத நிகழ்வாக ஒரு சில நிமிடங்களில் சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. சுமார் 3.03 சதவீதம் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாயினர். ரியால்டி மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தன.

தினசரி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 35993.64 புள்ளிகள் வரை கீழே சென்றது. எனினும் சில நிமிடங்களில் சந்தை ஏற்றம் காணத் தொடங்கியது. பின்னர் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 36841.60 புள்ளிகளில் நிலை கொண்டது.

அதேபோல நிப்டி 367.90 புள்ளி கள் வரை வீழ்ச்சி கண்டு 10866.45 புள்ளிகளுக்கு இறங்கியது. பின்னர் வர்த்தக முடிவில் 11143.10 புள்ளி களில் நிலை கொண்டது. ஒரு சில நிமிடங்களில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு பின்னர் சென்செக்ஸ் 900 புள்ளிகளும், நிப்டி 240 புள்ளிகளும் ஏற்றம் கண்டன.

உலக அளவில் டாலருக்கு நிக ரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினைக் கண் டுள்ளன. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தில் உள்ளது. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 42 ஆயிரம் என்ற அளவில் சரி வடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

தவிர சீனா - அமெரிக்க வர்த்த கப் பனிப்போர் போன்ற காரணி களும் சர்வதேச அளவில் பொருளா தார தேக்க நிலையை உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சி யாக சரிந்து வருகிறது. இந்த நிலை யில், இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று காலை வர்த்தக தொடக்கம் ஏற்றமாக இருந்தாலும், பிற்பகலில் திடீரென அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதளபாதாள வீழ்ச்சி ஏற்பட்டது.

நேற்றைய வர்த்தகத்தில் யெஸ் வங்கி உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் பங்குகள் மள மளவென சரிந்தன. ஆயில் அண்ட் கேஸ் துறை குறியீடு மட்டும் 221.73 புள்ளிகள் உயர்ந்தது. அதுபோல எனர்ஜி துறை குறியீடும் எற்றத்தில் இருந்தது. இதர குறியீடுகள் சரிவில் இருந்தன. வங்கித் துறை குறியீடு 926 புள்ளிகள் சரிந்தது.

நேற்று ஒரு நாளில் நிறுவனங் களின் சந்தை மதிப்பு ரூ.2,02,433 கோடி சரிந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த நான்கு நாட்கள் வர்த்தகத்தில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்புரூ.5.66 லட்சம் கோடி சரிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x