Published : 21 Sep 2018 09:19 AM
Last Updated : 21 Sep 2018 09:19 AM

மில்க்‌ஷேக் சந்தையில் களமிறங்கும் கோத்ரேஜ் 

கோத்ரேஜ் அக்ரோவெட் நிறு வனம் கையகப்படுத்திய ‘ஜெர்சி’ கிரீம்லைன் டெய்ரி நிறுவனம் மில்க்‌ஷேக் சந்தையில் களமிறங்கு கிறது. இந்நிறுவனம் நேற்று சென் னையில் தனது புதிய மில்க்‌ஷேக் ரகங்களை அறிமுகம் செய்தது.

இந்தியச் சந்தையில் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்களின் விற்பனை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. தற்போது இந்தச் சந்தையில் மில்க்‌ஷேக் சந்தையின் அளவு மட்டுமே 32 சதவீதம். கோத்ரேஜ் குழுமத்தின் துணை நிறுவனமான கிரீம்லைன் டெய்ரி புராடக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் இந்தச் சந்தையிலும் களமிறங்க முடிவுசெய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே ஜெர்சி என்ற பிராண் டின் பெயரில் பால், தயிர், பனீர், நெய், ஐஸ்க்ரீம் போன்ற தயாரிப்பு களை விற்பனை செய்து வருகிறது.

கிரீம்லைன் டெய்ரி நிறுவனத்தின் சிஇஓ ராஜ் கன்வர் தங்களது புதிய மில்க்‌ஷேக் ரகங்களை அறிமுகம் செய்து பேசினார். “100 சதவீத பாலுடன் தயார் செய்யப்பட்ட திக்கான மில்க்‌ஷேக் எங்களுடை யது. அதனால் இதற்கு ‘திக்‌ஷேக்’ என்று பெயர் வைத்துள்ளோம். சாக்லெட், பனானா காஃபி, ஸ்ட்ரா பெரி ஆகிய மூன்று மில்க்‌ஷேக் ரகங்களும், பட்டர் மில்க், லஸ்ஸி ஆகியவையும் தற்போது அறி முகப்படுத்தியுள்ளோம். விரைவில் வென்னிலா, ஐரிஷ் க்ரீம் சுவை களிலும் மில்க்‌ஷேக் அறிமுகப் படுத்த உள்ளோம். மற்ற போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் இவை திக்காக இருக் கும். உணவு இடைவேளைகளுக்கு இடையில் சாப்பிடும் சிற்றுண்டி களுக்கு இந்த திக்‌ஷேக் ரகங்கள் மிகச்சரியான தேர்வாக இருக்கும்.

மில்க் ஷேக் சந்தையில் நாங்கள் தாமதமாக நுழைந்தாலும், இந்தப் பிரிவில் நாங்கள் மூன்றாவது நிறுவனமாக இருக்கிறோம். மதிப் புக்கூட்டப்பட்ட மில்க்‌ஷேக் சந்தை யில் மக்களின் ஆதரவைப் பெற்று வளர்ச்சியடைவோம் என்ற நம் பிக்கை உள்ளது” என்றார்.

இந்த ’ஜெர்சி திக் ஷேக்’ ரகங்கள் 180 மி.லி. பேக் 25 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x