Published : 19 Sep 2018 10:49 AM
Last Updated : 19 Sep 2018 10:49 AM

பங்குச் சந்தையை புரிந்து கொள்ள ‘எஸ் அண்ட் பி’ பிஎஸ்இ குறியீடுகள்

பங்குச் சந்தை சார்ந்த முதலீடு களில் கவனம் செலுத்த ‘எஸ் அண்ட் பி’ பிஎஸ்இ குறியீடுகள் முதலீட்டாளர்களுக்கு உதவு கின்றன. இது தொடர்பாக ‘எஸ் அண்ட் பி' பிஎஸ்இ குறியீடுகளின் தெற்காசிய தலைவர் கோல் கோஷ் கூறுகையில்,

பங்குச் சந்தை போக்கினை புரிந்து கொள்ளவும், பங்குச் சந்தையில் சிறப்பாக செயல்படவும் ‘எஸ் அண்ட் பி ' குறியீடுகள் முதலீட் டாளர்களுக்கு உதவுகின்றன. எஸ்அண்ட்பி பாரத் 22, பிஎஸ்இ100, இ எஸ் ஜி இண்டெக்ஸ் போன்ற குறியீடுகள் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு உதாரணமாக உள்ளன.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடு களில் இடிஎப் எனப்படும் எக்ஸ் சேஞ்ச் டிரேடர் ஃபண்ட்களின் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா வில் ரூ.8,010 கோடியில் இருந்து ரூ.77,897 கோடியாக அதிகரித்துள் ளது. சிறப்பு குறியீடான ‘எஸ் அண்ட் பி' பிஎஸ்இ குறியீட்டின் மூலம் இடிஎப் பண்ட்களின் நிலையை எளிதாக அறிந்து கொள்ள முடியும். பங்குச் சந்தை முதலீடான இடிஎப்கள் குறைவான ரிஸ்க் கொண்டவை. குறைவாக கட்டணம், பன்முகத்தன்மை, வெளிப்படைத் தன்மையாக இயங் குபவை. தவிர எளிதில் மாற்றிக் கொள்ளவும் முடியும் என்றார்.

இடிஎப் முதலீடுகளின் வளர்ச் சிக்கு ‘எஸ் அண்ட் பி' சென்செக்ஸ் குறியீட்டுக்கான மதிப்பீடுகளும் முக்கிய காரணம் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x