Published : 18 Sep 2018 09:42 AM
Last Updated : 18 Sep 2018 09:42 AM

முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்ததால் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது: சர்வதேச காரணிகளோடு இந்திய ரூபாயின் வீழ்ச்சியும் காரணம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்களன்று முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்று வெளியேறியதால் இறக்கத்தைச் சந்தித்தன. சென்செக்ஸ் அதிகபட்சமாக 505 புள்ளிகள் சரிந்தன.

வாரத்தின் முதல் நாளான நேற்று இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்துடனேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 200 புள்ளிகள் இறக்கத்துடன் வர்த் தகத்தைத் தொடங்கிய நிலையில் வர்த்தக முடிவில் 505.13 புள்ளிகள் இறக்கம் கண்டு 37585.51 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி வர்த்தக முடிவில் 137.40 இறக்கம் கண்டு 11377.80 என்ற நிலையில் வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்று வெளியேறியதுதான் முக்கிய காரணமாகும். இதனால் ஐடி துறை பங்குகளைத் தவிர பெரும்பாலான பங்குகள் இறக்கத்தை சந்தித்தன. 1448 நிறுவன பங்குகள் சரி வடைந்த நிலையில், 1272 பங்கு கள் ஏற்றமடைந்துள்ளன. 178 பங்குகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகின.

பங்குச் சந்தையின் இந்த இறக் கத்துக்குப் பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாக அமைந்தன. அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்புகள், சீனா மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு செய்தி உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் அதிர்வுகளைச் சந்தித்துள்ளன. இது இந்தியப் பங்குச் சந்தை யிலும் எதிரொலித்தது. சந்தை இறக்கத்துக்கு இன்னொரு முக்கி யமான காரணம் இந்திய ரூபாயின் வீழ்ச்சி. தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் வெள்ளியன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 71.85 ஆக இருந்தது. திங்கள் கிழமையான நேற்று 79 காசுகள் குறைந்து டாலருக்கு நிகராக ரூ. 72.64 என்ற நிலைக்குச் சரிந்தது.

ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்று நிதி அமைச்சகம் கடந்த வெள்ளியன்று அறிவித்தது. தேவையற்ற இறக்குமதிகளைக் குறைப்பது, வெளிநாட்டு முதலீடு களைப் பெறுவதில் தளர்வு, வங்கி களின் மசாலா பாண்டுகளில் தளர்வு உள்ளிட்டவற்றை அறிவித்தது. ஆனால், அரசின் இந்த நடவடிக் கைகள் எதுவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கப் போதுமான தாக இருக்குமா என்பதில் பெரும் பாலானவர்களுக்குச் சந்தேகம் உள்ளது. இதனால் முதலீட்டாளர் கள் மத்தியில் நம்பிக்கைக் குறைந்து, சந்தையில் பங்குகளை விற்று லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். இதனால் பங்குச் சந்தை நேற்று அதி களவு இறக்கத்தைச் சந்தித்துள் ளது. வாரத்தின் முதல் நாளே இறக்கத்துடன் தொடங்கிய நிலையில் இறக்கம் மேலும் தொடர லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. பெரும்பாலான ஆசிய சந்தைகளும் சரிவையே சந்தித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x