Last Updated : 13 Sep, 2018 08:42 AM

 

Published : 13 Sep 2018 08:42 AM
Last Updated : 13 Sep 2018 08:42 AM

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஜன்தன் கணக்கில் போடப்பட்ட தொகை எவ்வளவு?- ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேள்வி

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது பல்வேறு வங்கிகளில் ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கேட்டுள்ளது.

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா கணக்கு 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இது தொடங்கப்பட்டது. வங்கிச் சேவை கிடைக்காத மக்களுக்கு வங்கியில் பணம் செலுத்துவது, எடுப்பதை எளிதாக்க வங்கிக் கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட தொகைகளை இந்தக் கணக்கில் போடப்பட்டது.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு இந்த ஜன்தன் வங்கி சேமிப் புக் கணக்கில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் வரையில் ஜன்தன் கணக்கில் ரூ. 80 ஆயிரம் கோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தகவல் ஆணை யர் சுதிர் பார்கவா, ரிசர்வ் வங் கிக்கு அனுப்பியுள்ள உத்தரவுக் கடிதத்தில் ஜன்தன் கணக்குகளில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டன என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். தன்னார்வலர் சுபாஷ் அகர்வாலும் இதே விவரத்தைக் கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த விவரம் ரிசர்வ் வங்கியிடம் இல்லாது போனால், மற்ற வங்கிகளில் இருந்து இந்த விவரத்தை பெற்று தரும்படி பார் கவா உத்தரவிட்டுள்ளார். இது தவிர பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட கரன்சிகளில் எவ்வளவு தொகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கில் வங்கிகளில் போடப்பட்ட விவரத் தையும் அளிக்குமாறு சிஐசி உத்தரவிட்டுள்ளது.

தன்னார்வலரான சுபாஷ் அகர் வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, வங்கி அதிகாரிகள் மீது எழுந்த புகார்கள், எந்தெந்த கணக்கில் எவ்வளவு தொகை போடப்பட்டது, எவ்வளவு தொகை மாற்றப்பட்டது என்ற விவரத்தை அளிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார்.

ஆனால் எந்த விவரத்தையும் தெரிவிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி கூறிவிட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஆணையரை அகர்வால் அணுகி தனக்குத் தேவையான விவரத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது அதைப் பின்பற்றாத வங்கி அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாக கைப்பற்றப்பட்ட ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 புதிய கரன்சிகள் எவ்வளவு என்ற விவரத்தையும் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x