Published : 12 Sep 2018 08:54 AM
Last Updated : 12 Sep 2018 08:54 AM

சர்வதேச அளவில் லஞ்சமாகக் கொடுக்கும் தொகை 2.6 லட்சம் கோடி டாலர்: ஐநா சபை பொதுச் செயலாளர் அறிக்கை

உலக அளவில் லஞ்சமாகக் கொடுக்கும் தொகை 2.6 லட்சம் கோடி டாலராகும். இது சர்வதேச ஜிடிபியில் 5 சதவீதமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

அனைத்து நாடுகளிலும் இப் போது லஞ்சம் நிறைந்துள்ளது. ஏழை பணக்காரர், வடக்கு தெற்கு வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்கிற பாகுபாடுகள் இல்லை. லஞ்சமாகக் கொடுக்கும் தொகை உலக அளவில் 2.6 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது கிட்டத்தட்ட சர்வதேச ஜிடிபியில் 5 சதவீதம்.

லஞ்சத்தை ஒழிப்பதற்காக சர்வ தேச சமூகம் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக நிதி மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத நிதி நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும். உலக வங்கியின் புள்ளிவிவரங்கள்படி, தொழில்துறையினரும், தனிநபர் களும் ஒரு ஆண்டில் சராசரியாக 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு லஞ்சம் அளிக்கின்றனர் என்றார்.

லஞ்சத்தை தடுப்பது மற்றும் சர்வதேச அமைதிக்கான பாது காப்பு குறித்து அமெரிக்க பாது காப்பு கவுன்சில் ஏற்பாடு செய்தி ருந்த நிகழ்ச்சியில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

லஞ்சத்தை எதிர் கொள்வது மிகப் பெரிய சவாலாக உருவாகியுள்ளது. உலக அளவில் லஞ்சத்துக்காக 2.6 லட்சம் கோடி டாலர் செலவிடப்படுவதாக உலக பொருளாதார மைய ஆய்வு குறிப்பிடுகிறது என்றும் கூறினார்.

ஒவ்வொரு நாடும் தங்களது இயற்கை கலாசாரங்களுக்கு ஏற்ப, நேர்மையான வழிகளைக் கடைபிடிக்கும் குடிமக்களை கொண்டிருக்குமானால் லஞ்சம் போன்ற குறுக்கு வழிகளை ஒழிக்க முடியும். இதில் ஏழைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x