Published : 24 Aug 2018 11:59 AM
Last Updated : 24 Aug 2018 11:59 AM

தகவலை முதலில் அனுப்பியவரைக் கண்டறிய முடியாது: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் வழியாக பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் முதலில் யாரால் அனுப்பப்பட்டது என்று கண்டறியும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்ட இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிராகரித்துள்ளது.

குறுந்தகவல்கள் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன எனக் கண்காணிப்பது வாட்ஸ் அப் நிறுவனத்தின் என்கிரிப்ஷன் நடை முறையை வலுவற்றதாக மாற்றி விடும் என்று குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப், இத்தகைய தொழில்நுட்பங் கள் தனிநபர் தகவல்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

பல்வேறு வகையான உணர்வு பூர்வமான உரையாடல்களுக்கு வாட்ஸ் அப் தளம் பயன்படுவதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், தவறான தகவல்களை அறிந்து கொள்வது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலான செயல்பாடுகளுக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளித்துவருவ தாகவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் வழியாக பரவும் வதந்திகளால் நிகழும் குற்றங் களைத் தடுக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட குறுந்தகவல் யாரால் முதலில் அனுப்பப்படுகிறது என்கிற தகவலை கண்டறியும் தொழில் நுட்பத்தை  அறிமுகப்படுத்த வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்திய அரசு சமீபத்தில் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துவது தவறான பயன்பாடு களைத் தீவிரப்படுத்தும். மேலும் வாட்ஸ் அப் செயல்படும் முறைக்கு இது முற்றிலும் எதிரானது என வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் வதந்திகள் பரவுவதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப் நிறுவனம் சர்ச்சையில் சிக்கி வரு கிறது. வாட்ஸ் அப் வதந்திகள் காரணமாக நாட்டின் பல பகுதி களிலும் குற்ற செயல்கள் நிகழ்வ தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை, வாட்ஸ் அப் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி சங்கர் பிரசாத், வாட்ஸ் அப் வழியாக புழக்கத்தில் விடப்படும் வதந்திகள் முதலில் யாரால் அனுப்பப்படுகிறது என்பதை கண் டறியும் தொழில்நுட்பத்தை உடைய உள்ளூர் அமைப்பு ஒன்றை ஏற் படுத்துமாறு வாட்ஸ் அப் நிறுவனத் தைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்ட தாகவும் அவர் கூறினார். வதந்தி களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் குற்றங் களுக்கு உடந்தையாக இருந்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த சந்திப்பு குறித்து எந்தக் கருத்தையும் டேனியல்ஸ் அப்போது தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன் றாக இந்தியா உள்ளது. 150 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலியை, இந்தியாவில் 20 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.

வதந்திகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு 2 நோட்டீஸ் களை இந்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது.

இந்தியாவுக் கான தலைவர் ஒருவரும், அணியும் அமைக்கப்பட்டுவருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பார்வேர்ட் குறுந்தகவல்களைக் கண்டறியும் வசதியும், பார்வேர்டு குறுந்தகவல்களை குறிப்பிட்ட முறைகளுக்குமேல் பிறருக்கு அனுப்பமுடியாத கட்டுப்பாடு களும் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் முன்னதாக விளக்கம் அளித்திருந்தது.

இதுதொடர்பாக கடந்த மாதம் வாட்ஸ் அப் தலைமை செயல்பாட்டு அதிகாரி மேத்யூ ஐடீமா தலைமையிலான குழு இந்திய தகவல் தொடர்பு செயலர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x