Last Updated : 15 Aug, 2018 08:32 AM

 

Published : 15 Aug 2018 08:32 AM
Last Updated : 15 Aug 2018 08:32 AM

இந்திய கரன்சிகள் சீனாவில் அச்சடிப்பா?- மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு

சீன கரன்சி அச்சடிக்கும் நிறு வனத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக வெளியான தகவலை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.

கரன்சி அச்சடிப்புக்கு சீன நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தந்ததாக வெளியான தகவலையும் அரசு மறுத்துள்ளது.

சீன கரன்சி பிரிண்டிங் கார்ப்ப ரேஷன் நிறுவனம், இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆர்டர் பெற்றிருப்பதாக வெளியான தக வல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் திட்ட வட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகள் மத்திய அரசுக்கு சொந்தமான அச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி வசம் உள்ள அச்சகத்தில் மட்டுமே அச்சடிக்கப்படுவதாக பொருளா தார விவகாரத்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித் துள்ளார்.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் எனும் தினசரியில் வெளியான கட்டுரையில், ஏன் பிற நாடுகள் தங்கள் நாடுகளின் கரன்சிகளை அச்சடிக்கும் லைசென்ஸை சீனா வுக்கு வழங்கியுள்ளன என்ற கேள் விக்கு, உலக பொருளாதாரத்தில் சீனா மிகுந்த செல்வாக்கு மிக்கதாக வளர்ந்து வருவதால் பிற நாடுகள் தங்கள் நாட்டு கரன்சிகளை அச் சடிக்கும் உரிமையை சீனாவுக்கு வழங்கி வருகின்றன என்று குறிப் பிடப்பட்டுள்ளது. சீன அரசுக்குச் சொந்தமான சீனா பேங்க்நோட் பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்ப ரேஷன் நிறுவனம் இந்தியா உள்பட பல நாடுகளுக்கான கரன்சிகளை அச்சடித்து தருவதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை,மலேசியா, இந்தியா, பிரேசில் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கான கரன்சிகளை சீனா பேங்க்நோட் பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் அச்சடித்து தருவதாக அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசு மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக உரிய விளக்கத்தை ஜேட்லி மற்றும் பியுஷ் கோயல் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்த லான விஷயமாகும். இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து கள்ள நோட்டு கள் அச்சிடுவது எளிதாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன நாளிதழ் செய்தி உண்மை யாக இருந்தால் அது தேசிய பாது காப்பில் இந்தியா மிகவும் அலட் சிய போக்குடன் இருப்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்திய பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் இது என்றும் நாட்டின் நிதித்துறை இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரும் அச் சுறுத்தல் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சந்தா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொது அரங்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு நிறுவனங்களை விடுத்து வெளிநாட்டு நிறுவனங் களை தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது குறித்து சீனாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்ததா அல்லது சீன அரசின் நெருக்குதலுக்கு இந்தியா பணிந்து விட்டதா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிற நாடுகளுக்கு கரன்சி அச்சடித்து கொடுப்பதற்காக சீன அச்சடிக்கும் நிறுவனம் முழு வீச்சில் இயங்குவதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x