Published : 14 Aug 2018 08:42 AM
Last Updated : 14 Aug 2018 08:42 AM

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும் ரூ.1.08 அளவுக்கு சரிவு இருந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1.57 சதவீத சரிவினை சந்தித்துள்ளது.

துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது. இதனால் உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 69.91 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், இந்த சூழலை கவனமாக கண் காணித்து வருகிறோம். டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு விரைவில் 70 ரூபாய்க்கும் கூடுதலாக மதிப்பிழக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

திங்கள்கிழமை காலை வர்த்தகத்தில் 68.42 என்கிற அளவுக்கு ரூபாய் மதிப்பு இருந்தது. பொரு ளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக 41 பைசா ஏற்றம் கண்டிருந்தது. ஆனால் சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக மதியத்துக்கு பின்னர் 69.92 பைசா வரையில் வீழ்ச்சி கண்டது.

இதன்காரணமாக டாலருக்கு நிகரான செலவுகள் அதிகரிக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x