Published : 12 Aug 2018 08:13 AM
Last Updated : 12 Aug 2018 08:13 AM

இ-காமர்ஸ் கொள்கை வரைவு குறித்து நிறுவனங்களுடன் மீண்டும் ஆலோசனை:  அதிகாரிகளுக்கு சுரேஷ் பிரபு உத்தரவு 

இ-காமர்ஸ் கொள்கை வரைவு குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பு களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துமாறு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இ-காமர்ஸ் கொள்கை வரைவு தொடர்பாக நிறுவனங்கள் கடுமையான ஆட் சேபம் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்து மாறு சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வர்த்தகத் துறை அமைச்சகம், இ-காமர்ஸ் கொள்கை வரைவு தொடர்பான சில சிக்கல்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் சுரேஷ் பிரபுவிடம் தெரிவித்ததாகவும், எனவே இந்த சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் அந்த அமைப்புகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்துமாறு அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. வரைவு முழுமையாக தயாரானதும் அமைச்சர் தனிப்பட்ட முறையில் அதனை ஆய்வு செய் வார் எனவும் வர்த்தக அமைச்ச கம் தெரிவித்துள்ளது. இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சியை மேம் படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாது காப்பு காரணங்களை முன்னிட்டு ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறு வனங்கள் தங்களது இந்திய வாடிக்கையாளர் தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமிக்க வேண்டும் என இந்த கொள்கை வரைவில் கூறப்பட்டுள்ளது. ஆன் லைன் சில்லறை வர்த்தக நிறு வனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ தங்களது ஆன் லைன் வர்த்தக சந்தையிலுள்ள பொருள் அல்லது சேவையின் விலை மற்றும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது எனவும் இந்த கொள்கை வரைவில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறுவனங்கள் பெரிய அளவி லான தள்ளுபடிகளை அளிப்பது தடுக்கப்படும் எனக் கருதப்படு கிறது. வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அளிப்பதற்கான கால அளவை முன்கூட்டியே நிறுவனங் கள் தீர்மானிக்கும் வகையிலான பிரீ-செட் டைம்ஃபிரேம் என்ற முறையை அறிமுகப்படுத்தவும் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அறி முகப்படுத்தவும் இந்த வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது வரை இ-காமர்ஸ் என்பதற்கு பொது வான வரையறுகள் எதுவும் இல் லாத நிலையில் இ-காமர்ஸுக்கு பொது வரையறை உருவாக்கப்பட வேண்டும் என இந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபே அட் டைகளை இ-காமர்ஸ் முறையில் அதிகம் பயன்படுத்துவதை ஊக் குவிக்கவேண்டும் எனவும் இந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிறுவனங்கள் இந்த வரை வில் சிக்கல்கள் இருப்பதாக குறிப் பிட்டிருக்கும் நிலையில் வேறு சில நிறுவனங்கள் இந்த வரைவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x