Published : 11 Aug 2018 08:56 AM
Last Updated : 11 Aug 2018 08:56 AM

புதிய லோகோவை அறிமுகம் செய்தது பிரிட்டானியா

நூறாவது ஆண்டில் பிரிட்டானியா நிறுவனம் அடியெடுத்து வைத்திருக் கிறது. இந்த நிலையில் புதிய லோகோவினை இந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் 50 புதிய பொருட்களை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் பேரி கூறியதாவது: 100 ஆண்டு என்பது முக்கியமான மைல் கல். இந்த நிலையில் நிறுவனத்துக்கு புதிய லோகோவினை அறிமுகம் செய்ய இருக்கிறோம். முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கி இருக்கிறோம் மற்றும் நூற்றாண்டு கொண்டாட்டத்தை மூன்று மாதங்களுக்கு கொண்டாட இருக்கிறோம்.

மொத்த வருமானத்தில் எங்களு டைய பிஸ்கட் பிரிவு வருமானம் 75 சதவீதமும் இதர உணவு வகைகளில் 25 சதவீத வருமானமும் வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இதர பிரிவுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை 50 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம் என கூறினார்.

நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத்தலைவர் குஞ்சன் ஷா கூறும்போது, தமிழகம் எங்களுக்கு முக்கியமான சந்தை என தெரிவித்தார். மேலும் பிரிட்டானியா நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார்.10,000 கோடியாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1,500 கோடிக்கு மேலான வருமானம் கிடைக்கிறது. குறிப்பாக மில்க் பிக்கிஸ் பிஸ்கடின் 85 சதவீதத்துக்கு மேலான வருமானம் தமிழகத்தில் இருந்து வருகிறது என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x