Published : 06 Aug 2018 09:40 AM
Last Updated : 06 Aug 2018 09:40 AM

5 ஜி திட்டங்களை அறிமுகம் செய்ய டெக் மஹிந்திரா திட்டம்

அடுத்த மாதத்தில் சோதனை அடிப்படையில் 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிபி குர்நானி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நடப்பு நிதி ஆண்டில் பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் ரூ.10 கோடி டாலர் அள வுக்கு வருமானம் ஈட்ட முடியும் என நம்புகிறோம்.

செப்டம்பரில் 5 ஜி திட்டங்களை அறிமுகம் செய்வோம் என நம்புகிறோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த இருக் கிறோம். 5ஜியில் பெரிய அளவி லான வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி சேவைக்கான ஏலம் நடக்க இருக்கிறது.

எங்களுடைய வாடிக்கையாளர் களுக்கு பிளாக்செயின் தொழில் நுட்பம் மூலம் சேவைகளை வழங்கி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாகவே வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு இறுதியில் இந்த தொழில்நுட்பம் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். நாங்கள் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுவதால் 10 கோடி டாலருக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

நாங்கள் திறன் மேம்பாட்டில் அதிகம் கவனம் செலுத்துகிறோம். இந்தியாவுக்கென பிரத்யேக பிளாக்செயின் தளம் இல்லை. ஆனால் சீனா மற்றும் கொரியாவில் இந்த தொழில்நுட்பத்துக்காக பிரத்யேக தளம் இருக்கிறது. நாம் ஏன் இதற்கென பிரத்யேக தளம் அமைக்க கூடாது.

ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் 150-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் பணிபுரிந்து வருகின்ற னர். தெலுங்கானா அரசிடம் பிளாக்செயின் தொழில்நுட்பத்துக் காக பிரத்யேக ஒப்பந்தம் செய் திருக்கிறோம் என கூறினார்.

தொலைத்தொடர்பு துறை, ஐடி, எலெக்ட்ரானிக்ஸ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அதிகாரிகளின் தலைமையிலான குழுவினை கடந்த ஆண்டு மத்திய அரசு அமைத்தது. இந்த குழு 5ஜி சேவையின் திட்டம், இலக்குகள் குறித்து பரிந்துரை செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x